தானமாக கொடுத்த சிறுநீரகத்திற்கு நஷ்டஈடு கோரி வழக்குத்தாக்கல்
காதல் தம்பதியராக வாழ்ந்த காலத்தில் தன்னால் வழங்கப்பட்ட சிறுநீரகத்திற்கு நஷ்டஈடு வழங்கக் கோரி விவாகரத்து பெற்ற மனைவிக்கு எதி ராக நபரொருவர் வழக்குத் தாக்கல் செய்த சம்பவம் நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது.
மருத்துவரான றிச்சர்ட் பரிஸ்டா என்ற இந்த நபர், தனது முன்னாள் மனைவி டோவெல் பரிஸ்டாவுடன் இணைந்து வாழ்ந்த சமயத்தில் சிறுநீரகங்கள் செயலிழந்த அவருக்கு தனது சிறுநீரக மொன்றை வழங்கியுள்ளார்.
2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டோவேல் பரிஸ்டாவுக்கு சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.
இந்நிலையில் நஸாயு பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் றிச்சர்ட் பரிஸ்டா (49 வயது), நேற்று முன்தினம் புதன்கிழமை மனைவிக்கு தன்னால் வழங்கப்பட்ட சிறுநீரகத்துக்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டஈடாக வழங்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment