தலைக் கவசத்திற்கு பதிலாக பூசணிக்காய்களை பயன்படுத்தும் நைஜீரியர்கள்
மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்திற்கு பதிலாக (ஹெல்மட்) காய்ந்த பூசணிக்காய்க் கோதுகளையும், வர்ணம் பூசப்பட்ட மண் சட்டிகளையும் இறப்பர் துண்டுகளையும் அணிந்து பயணம் செய்த பலர் நைஜீரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதி விபத்துகளின் போது அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெறுவதைக் கருத்திற் கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்வதை வலியுறுத்தும் சட்டம், கடந்த முதலாம் திகதி நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களின் அதிக விலை காரணமாகவும், தலைக்கவசம் அணிவதால் தோல் நோய்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தாலும் மேற்படி மாற்றுவழிகளை பலரும் நாடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பூசணிக்காய்களைக் குடை ந்து அதனை தலைக்கவசம் போல் வடிவமைத்து பலர் அணிந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.
அதேசமயம் நிர்மாண வேலைகளில் ஈடுபடுபவர்கள், தமது பாதுகாப்புக்காக அணியும் தலைக் கவசங்களை நாளொன்றுக்கு 3.60 அமெரிக்க டொலர் பெறுமதியான கட்டணம் வசூலித்து, மோட்டார் வாகனம் ஓட்டுபவர்களுக்கு வாடகைக்கு வழங்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் சட்டத்தை ஏமாற்றும் வகையில் போலி தலைக்கவசம் அணிந்து சென்ற 28 பேரை கைது செய்துள்ளதாக நைஜீரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment