முல்லைத்தீவையும் மிக விரைவில் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகளிடம் இருந்து முல்லைத்தீவையும் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கிளிநொச்சி நகர் படையினரால் கைப்பற்றப்பட்ட செய்தியை தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்த பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே ஆனையிறவு உள்ளது. ஐந்து கிலோமீற்றர் தொலைவில் முல்லைத்தீவு உள்ளது. எனவே மிக இலகுவாக கைப்பற்றி விடுவோம் என்று தெரிவித்த தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைவதுதான் அவர்களுக்கு உள்ள ஒரே வழி என்றும் கூறினார்.
கடந்த இரு மாதங்களில் 1,500 விடுதலைப் புலிகள் படையினரால் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment