கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை பட்டாசு கொழுத்திக் கொண்டாடப்பட்டது
விடுதலைப் புலிகளிடமிருந்து கிளிநொச்சியை இராணுவத்தினர் மீட்டிருப்பதாக ஜனாதிபதி அறிவித்ததும், கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் கொழுத்தி வெற்றி கொண்டாடப்பட்டது.
பிற்பகல் 4 மணியளவில் பிரதான வீதிகளில் சென்ற வாகனங்களை மறித்து பட்டாசுகள் கொழுத்தப்பட்டன. புறக்கோட்டை புகையிரதநிலையத்துக்கு முன்பாக மக்கள் கூடி பட்டாசுகளைக் கொழுத்தி வெற்றியைக் கொண்டாடினர்.
நுகேகொட பகுதியில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களிலும், முச்சக்கர வண்டிகளிலும் தேசியக் கொடியைக் கட்டியவாறு பேரணி நடத்தியிருந்தனர்.
கிளிநொச்சி வெற்றியை ஆரம்பரமின்றி, மோதல்களில் உயிரிழந்த வீரர்களுக்கும், ஏனைய படை வீரர்களுக்கும் ஆசிவேண்டி அருகிலுள்ள மதஸ்தலங்களில் வளிபாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்; தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலும், கிளிநொச்சியைக் கைப்பற்றியமை கொண்டாடப்பட்டுள்ளது.
ஐஎன்லங்கா இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment