விமானப் படை தலைமையகம் அருகில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
இருவர் பலி: 30 பேர் காயம்
கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள விமானப் படை தலைமையகத்துக்கு அருகில் இன்று (02) மாலை இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் வரை காயமடைந்தனர்.
இச்சம்பவம் இன்று மாலை இடம் பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலையாளியே குண்டை வெடிக்கச் செய்துள்ளாரெனத் தெரிய வருகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(லங்கா ஈ நியூஸ் ஜன-02,2009 பி.ப 06.30)
0 விமர்சனங்கள்:
Post a Comment