கிளிநொச்சி படையினர் வசம் : ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கிளிநொச்சி முற்றாக மீட்கப்பட்டு விட்டதாக சற்று நேரத்துக்கு முன்னர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையொன்றையும் நாட்டு மக்களுக்கு ஆற்றியுள்ளார்.
(முன்னைய செய்தி) இலங்கை இராணுவத்தினர் எந்த நேரத்திலும் கிளிநொச்சியைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாமென பாதுகாப்புப் படை வட்டாரங்கள் இன்று (02) தெரிவித்தன.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி கிளிநொச்சி ரயில் நிலையத்தைப் படையினர் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள கொண்டு வந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட பரந்தன் பகுதியைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவத்தின் முதலாவது செயலணியே கிளிநொச்சியைக் கைப்பற்றும் முன்னனெடுப்பிலும் இறங்கியுள்ளன.
இராணுவத்தினரின் கஜபா பிரிவும் இராணுவத்தின் 11 ஆவது படைப் பிரிவும் ஏ-9 பாதைக்கு மேற்காகவும் 12 ஆவது கஜபா படைப் பிரிவும் 6 ஆவது கெமுனுப் பிரிவும் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றும் வகையில் உக்கிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
அடம்பன் நகரைக் கைப்பற்றிய இராணுவத்தின் 57 ஆவது பிரிவு கிளிநொச்சிக்கு தெற்காகவும் மேற்காகவும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியின் மத்திய பகுதியை நோக்கி 572 ஆவது 571 ஆவது பிரிகேட் பிரிவினர் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
(லங்கா ஈ நியூஸ் ஜன-02,2009 மு.ப 11.30)
0 விமர்சனங்கள்:
Post a Comment