முல்லைத்தீவு வனப்பகுதியில் இராணுவம் புகுந்து சண்டை போடுவது இயலாத காரியம் -கருணா
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுவது தவறானது அவர் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கருணா தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தளபதியாக விளங்கியவர் கருணாஅம்மான் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP) அமைப்பை உருவாக்கினார் கருணாஅம்மானின் ரிஎம்விபி அமைப்பின் உதவியுடன் தான் கிழக்கு மாகாணத்தை இலங்கைப் படைகள் மீட்டன. இந்நிலையில் கிளிநொச்சி வீழ்ந்து விட்டதைத் தொடர்ந்து அடுத்து முல்லைத்தீவுக்கு இலங்கைப் படைகள் குறிவைத்து உள்ளமையினால் பிரபாகரன் இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லக்கூடும் என்று பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் கருணாஅம்மான் இதனை நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்வார் என்று நான் நினைக்கவில்லை அப்படிகூறுவது தவறு முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றும் நோக்கில் இராணுவம் முன்னேறி வருகிறது ஆனால் முல்லைத்தீவு வனப்பகுதியில் இராணுவம் புகுந்து சண்டை போடுவது இயலாத காரியம் தற்போது தெற்குஇலங்கைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ9 நெடுஞ்சாலையை தடைகளற்ற பகுதிகளான மாற்றுவதே முக்கிய குறிக்கோள் என்றும் கூறியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment