ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய ஒரு படகில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வந்ததாக பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கடலோர கிராமங்கள் மற்றும் கடற்கரை காட்டுப் பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையிலும், விசாரணையிலும் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தின் சேராங்கோட்டை கடல் பகுதியில் நேற்று அதிகாலை பைபர் கிளாஸ் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதனை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்தப் படகில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் கறுப்புச் சட்டை அணிந்து இருந்ததாகவும், அவர் கையில் பை ஒன்றை வைத்திருந்த தாகவும் படகில் இருந்து இறங்கியதும் அவர் அருகில் இருந்த சவுக்கு தோப்புக்குள் சென்று மறைந்துவிட்ட தாகவும் நேரில் பார்த்த மீனவர் ஒருவர் கூறினார்.
படகில் வந்தவர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என்றும் ஒரு தகவல் பரவியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சேராங்கோட்டைக்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய படகை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்தப் படகில் 4 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் காணப்பட்டன.
அத்துடன் கடலுக்கு அடியில் சுவாசிப்பதற்கான சாதனம் ஒன்றும் இருந்தது. 25 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் என்ஜின், 4 கையுறைகள், ஒரு கறுப்புத் தொப்பி, 4 பிளாஸ்டிக் பாய்கள் மற்றும் ஒரு எரிபொருள் கேன் ஆகியவையும் அந்தப் படகில் காணப்பட்டன.
அந்தப் படகு இலங்கையின் நீர்கொழும்பில் கட்டப்பட்டதாக குறிக்கப்பட்டிருந்தது. அதில் கிடந்த சிங்கள மொழியில் காணப்பட்ட விவரங்களுடன் கூடிய 2 அடையாள அட்டைகளை போலீசார் கைப்பற்றி னார்கள். அதில் ஒரு அடையாள அட்டையில் 3 நபர்களின் போட் டோக்களும் ஒட்டப்பட்டிருந்தன.
இந்தப் படகில் பிரபாகரன் வந்ததாக பரவிய தகவலை தொடர்ந்து கடலோர கிராமங்கள், கடற்கரை காட்டுப் பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையிலும் விசாரணையிலும் ஈடுபட்டனர். கியூ பிரிவு போலீசார் மண்டபம் அகதிகள் முகாமுக்கு சென்று அங்கு புதிய நபர்கள் யாராவது வந்தனரா என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சோதனைச்சாவடிகளில் அனைத்து வாகனங்களும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. இதே போல ஓட்டல்கள், லாட்ஜூகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் கே.ஏ. செந்தில்வேலன் உள்ளூர் மீனவர்களிடம் விசாரணை நடத்தி னார். இது பற்றி ராமேஸ்வரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எஸ்.எஸ். கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், அந்தப் படகில் வந்தவர் விடுதலைப்புலிகள் இயக் கத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு இலங் கையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களில் யாராவது வந்திருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
விமானத்தில் தப்பினாரா?
இதனிடையே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 விமானங்களுடன் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் நேற்று "தி டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் 6 விமான ஓடு பாதை களை ஏற்கனவே இலங்கை ராணுவம் கைப்பற்றி விட்டாலும் பிரபாகரன் அவராகவே தப்பிச் சென்றிருக்கக் கூடும் என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
பிரபாகரன் முல்லைத்தீவில் தான் இருக்கிறாரா அல்லது தப்பிச் சென்று விட்டாரா? என்று தெளிவாகத் தெரியவில்லை. அவர் ஒருவேளை விமானத்தின் மூலம் தப்பிச் சென்றி ருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அவர் படகு மூலமாகவே தப்பிச் சென்றிருக்க வாய்ப்புகள் உண்டு என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அவர்களை அனைத்து திசைகளி லும் நாங்கள் சுற்றி வளைத்து விட் டோம். அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கடலில் குதிப்பதுதான் என்று இலங்கை ராணுவத் தலைமைத் தள பதி சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment