தமிழ் மக்களை விடுவிக்குமாறு கருணாநிதியும் ஜெயலலிதாவும் புலிகளுக்கு வேண்டுகோள் விடுக்கலாம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
தமிழக முதல்வர் கருணாநிதியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெயலலிதாவும் யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் விஜயம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களை விடுவிக்குமாறு புலிகளுக்குத் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கலாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஆசியன் ரிபூன் இணையத்தளத்துக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, யுத்த நிறுத்தம் ஒன்றைத் தமிழக முதல்வர் விரும்பினால் முதலில் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
புலிகளின் பிடியிலுள்ள மக்கள் இராணுக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.
அணைக்கட்டு உட்படப் பயன்தரக் கூடியவைகளை உடைப்பதன் மூலம் மக்களுக்குப் புலிகள் கஸ்டங்களை ஏற்படுத்தி வருகின்றனர். வடமாகாணம் புலிகளிடமிருந்து முற்றாக மீட்கப்பட்டவுடன், வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றவும் அரசாங்கம் துரித நடவடிக்கையெடுக்கும்.
புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களிலேயே வசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment