முல்லைத்தீவைக் கைப்பற்றியமை இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்த பாரிய வெற்றி! இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் தளபதி பாராட்டு
புலிகளின் முக்கிய கோட்டையான முல்லைத்தீவைக் கைப்பற்றியதன் மூலம் இலங்கை இராணுவத்துக்கு பாரிய வெற்றி கிடைத்திருப்பதாக இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் தளபதி ஏ.எஸ். கல்கட் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு வனாந்தரம் உலகில் மிகவும் ஆபத்தான பகுதிகளுள் ஒன்றாகும். 1988ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினர் கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுற்றி வளைத்தபோது 7 கிலோ மீற்றர் நீளமான சுரங்கப் பாதையூடாக அவர் முல்லைத்தீவுக் காட்டுக்குள் தப்பிச் சென்றார். பின்னர் முல்லைத்தீவுக் காட்டிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையினர் மீது புலிகள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர்.
புலிகளுக்கெதிராக 1988ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போன்றே தற்போது இலங்கை இராணுவத்தினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment