புலிகளின் குரல் வானொலி இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது
அனுமதிப்பத்திரமும் ரத்து! இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று
நேற்றுமுதல் புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலி தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவ்வானொலிக்கான அனுமதிப்பத்திரம் ஐ.தே.க ஆட்சியில் இருந்த சாமாதான பேச்சுவார்த்தை காலகட்டங்களில் வழங்கப்பட்டிருந்தது. புலிகள் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் இவ்வானொலியை தடைசெய்வது தொடர்பாக மூன்று வாரங்களுக்கு மேலாக விவாதித்து வந்த அமைச்சரவை நேற்று தடை செய்வதென்ற முடிவுக்க வந்துள்ளது. இதன் உத்தியோக அறிவித்தல் நாளைய வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment