முல்லைத்தீவின் பல பகுதிகளில் மோதல் இரு தரப்புக்கும் சேதம்; சடலங்களும் மீட்பு - பாதுகாப்புக்கான ஊடக நிலையம் தெரிவிப்பு
முல்லைத்தீவின் பல பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மோதல்கள் சுமார் 30 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் புலிகள் பாரியளவான இழப்புக்களை சந்தித்துள்ளனர். ஆயினும் அவ்விபரங்கள் குறித்து இதுவரை உறுதியாகக் கூறும் வகையில் தகவல்கள் கிடைக்கப்படவில்லை எனவும் ஊடக நிலையம் தெரிவித்தது.
இது தொடர்பில் பாதுகாப்புக்கான ஊடக நிறையம் மேலும் கூறியதாவது
முல்லைத்தீவில் பல முனைகளிலிருந்தும் முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டு வரும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முள்ளியவளை, குருவிக்குளம், புதுக்குடியிருப்கு கிழக்கு, உடையார்கட்டுக்குளம், அடம்பன்குளம், விசுவமடு ஆகிய பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் போது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதல்களில்; படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் புலிகளின் தாக்குதல்கள் படையினரால் தொடர்ந்தும் முறியடிக்கப்பட்டன.
இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற தீவிர மோதல்களை அடுத்து படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலி உறுப்பினர்களின் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் ரீ 56 ரக துப்பாக்கிகள் 03, எம்.பி.எம்.ஜ. ரக துப்பாக்கி 01, மற்றும் வரைபடம் 01 போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment