இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளைச் சேர்க்கக் கூடாது
இலங்கையில் இடம் பெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென அ.திமு.க செயலாளர் ஜெயலலிதா நேற்று (22) விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் வடக்கில் இடம் பெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர்த்து ஏனைய தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இதற்கு உதவ மத்திய அரசு முன்வரவேண்டும். இதுவே அ.தி;.மு.கவின் நிலைப்பாடாகும்.
இலங்;கைத் தமிழர் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இதற்குத் தடையாகவிருப்பது தமிழீழ விடுதலைப் புலிகள்தான். அத்துடன் பிரபாகரனுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
0 விமர்சனங்கள்:
Post a Comment