நடிக்கிற நாய் கடிக்காது நம்பி கெட்டார் நடிகர்!
யதார்த்த இயக்குநர்களின் படங்களுக்கு இனி கால்ஷீட் இல்லை என்று அறிவித்தாலும் ஆச்சர்யமில்லை. அந்தளவுக்கு புண்பட்டு போயிருக்கிறது நாய் ஒன்று. யோகி படத்தில் ஒரு காட்சி. பத்திரிகையாளர் தேவராஜ் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இவரை வாசலில் நின்று யாரோ அழைப்பது போலவும், யார் என்று பார்க்க வாசலுக்கு போகும் போது இவர் வளர்க்கும் நாய் செல்லமாக மறிப்பது போலவும் காட்சி. கையிலிருக்கிற கட்டையால் நாயின் மண்டையில் தாக்கிவிட்டு வாசலுக்கு போக வேண்டும் தேவராஜ்.
ரிகர்சல் ஓ. கே! ""நாயின் மண்டையில் நிஜமாவே அடிச்சிடுங்க. அது குலைக்கவே இல்லையே'' என்றார் இயக்குநர் சுப்பிரமணிய சிவா. பிறகென்ன...? வாசல் பக்கம் குரல் கேட்க, எழுந்து நடந்தார் தேவராஜ். நாயும் மறித்தது. கையில் இருந்த கட்டையால் நாயின் மண்டையில் ஒரே போடு.
கோபம் தலைக்கேறியது நாய்க்கு. சில அடி தூரம் கூட போயிருக்க மாட்டார் தேவராஜ். பாய்ந்து சென்று அவரது கை, கால்களை கடித்து குதற ஆரம்பித்தது. குரைக்கிற நாய் கடிக்காது என்பது மாதி?, நடிக்கிற நாயும் கடிக்காது என்று நம்பிக் கொண்டிருந்த தேவராஜின் எண்ணத்தில் கோர பற்களால் கோலம் போட்டது நாய்.
அவசரம் அவசரமாக அவரை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். நல்லவேளை, கையில் ஊசி போட்டு அனுப்பியிருக்கிறார்கள். மண்டையில் அடிவாங்கிய நாய்க்கும் மருத்துவ காப்பீடு வழங்கியிருக்கிறது யூனிட்!
0 விமர்சனங்கள்:
Post a Comment