விஸ்வமடுவில் நிலத்துக்கு அடியில் குண்டுகள் துளைக்காத கதவுகள் கொண்ட சொகுசு வீடு
பிராபகரனுக்குரியதென இராணுவம் சந்தேகம் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முக்கிய மறைவிடமென நம்பப்படும் நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த சொகுசு வீடொன்றினை இராணுவத்தினர் நேற்றுக் (30) கண்டு பிடித்துள்ளதாக இலங்கை இராணுவத்தின் இணையத்தளம்செய்தி வெளியிட்டுள்ளது.
விஸ்வமடு காட்டுப் பகுதியிலேயே இது அமைக்கப்பட்டிருந்தது.
மிகவும் ஆடம்பரமான முறையில் அமைக்கப்பபட்டிருந்த இந்த வீட்டுக்கான மின்விநியோகம் சப்தத்தை வெளிப்படுத்தாத பாரிய மின் பிறப்பாக்கி ஒன்றின் மூலம்; வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டின் அனைத்துக் கதவுகளும் குண்டுகள் துளைக்காத வகையில் அமைக்கப்பட்டிருந்தன.
பயன்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட மருந்துப் பொருட்களும் இங்கு காணப்பட்டதாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
(லங்கா ஈ நியூஸ்)
0 விமர்சனங்கள்:
Post a Comment