பிரபாகரனைக் கைது செய்யும் வரை எமது குரல் ஓயாது
தமிழகத்திலுள்ள இலங்கை எம்பிக்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
போராட விரும்பினால் இலங்கை செல்லட்டும் -தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் எம்பிக்களின் செயற்பாடுகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டுமென தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவர் டி. யசோதா நேற்று (31) வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து அவர் சட்டப் பேரவையில் உரையாற்றுகையில், இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியத் தலைவர்களையும் மறைந்த தலைவர்களையும் கொச்சைப்படுத்துவது ஏன்?
தமிழர்களுக்காகப் போராட வேண்டுமென்றால் இலங்கைக்குச் சென்ற போராட வேண்டியதுதானே? தமிழகத்தில் அமைதியைக் குலைத்து சட்டத்தைச் செயலிழகச் செய்ய முயற்சிப்பது ஏன்?
பிரபாகரனைக் கைது செய்யும் வரை எங்கள் குரல் ஓயாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment