பிரபாகரன், பொட்டு அம்மானுக்கு பிடிவிறாந்து.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் மேலும் மூவரையும் தடுத்து வைப்பதற்கான பிடியாணை ஒன்று இன்று பிறப்பிக்கப்பட்டது.
வெளிவிவகாரத்துறைக்கான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் இவர்களுக்குத் தொடர்பிருப்பதன் காரணமாகவே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதினி விக்கிரமசிங்க இன்று பிறப்பித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான், சார்ள்ஸ, கோமதி மணிமேகலை ஆகியோரைக் கைது செய்யுமாறே நீதியரசர் உத்தரவிட்டார்.
லக்ஸ்மன் கதிர்காமாரின் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைகள் இன்று இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வடக்கில் இடம்பெறும் நடவடிக்கைகள் காரணமாக இவர்களைக் கைது செய்யக் கூடியதாகவிருக்குமெனப் பொலிசார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இவர்களைக் கைது செய்யுமாறு சர்வதேச பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment