புலிகளின் பிரதான கட்டுப்பாட்டு நிலையம் தர்மபுரத்தில் கண்டுபிடிப்பு
படை முகாம்களின் வரைபடங்களும் மீட்பு;
மோதல்களில் புலிகளின் சடலங்கள், ஆயுதங்கள் மீட்பு
முல்லைத்தீவு, தர்மபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டி ருந்த புலிகளின் நடவடிக்கைகளுக்கான பிரதான கட்டுப் பாட்டு நிலையத்தை பாதுகாப்புப் படையினர் கண்டு பிடித்துள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புலிகள் தங்களது சகல நடவடிக்கைகளுக்கும் இத னையே பிரதான கட்டுப்பாட்டு நிலையமாகப் பயன் படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தலை மையில் நேற்று நடைபெற்றது.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில் குறிப்பிட்டதாவது,
முல்லைத்தீவை நோக்கி நாளுக்கு நாள் முன்னேறி வரும்இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் புலிகளின் முக்கிய பிரதேசமாக விளங்கிய தர்மபுரத்தை கைப்பற்றினர். இந்தப் பிரதேசத்தை சுற்றி வளைத்து பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவிந்திர டி சில்வா தலைமையிலான படைப்பிரிவினர் புலிகளின் நடவடிக்கைகளுக்கான பிரதான கட்டுப்பாட்டு நிலையத்தை கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 80 x 40 அடி அளவிலான பிரதேசத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் கொங்கிரீட்டினால் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு அறைக்குள் சகல வசதிகளும் காணப்படுகின்றன.
இலங்கையின் வரைபடங்களுடன் ஒவ்வொரு பிரதேசத்தை தெளிவாக சித்தரிக்கும் வரைபடங்களும் தனித்தனியாக ஒட்டப்பட்டிருந்தன.
இராணுவத் தலைமையகம் உட்பட இலங்கை முழுவதிலும் உள்ள இராணுவ மற்றும் முப்படைகளின் முகாம்கள், படைப் பிரிவுகள், படையணிகளின் தலைமையகங்கள் சுட்டிக்காட்டப்பட்ட வரைபடங்கள், புலிகளின் முக்கிய பிரதேசங்கள், முகாம்கள், இராணுவத்தினதும் புலிகளினதும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை காண்பிக்கும் வரைபடங்களும் இந்த கட்டுப்பாட்டு அறை முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அருகில் புலிகளின் செய்மதி தொலைத்தொடர்பு நிலையம் மற்றும் பிரதான விரிவுரை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. புலிகளின் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு செல்வதற்கு மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் வழிஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரத்தை புலிகளிடமிருந்த விடுவித்த படையினர் இங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டு தயாரிக்கும் பிரதேசத்தையும் மூன்று மாடிகளைக் கொண்ட பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் கைப்பற்றியிருந்தனர். இந்த முகாம்களுக்கு அண்மித்த பிரதேசத்திலேயே இந்த கட்டுப்பாட்டு நிலையமும் அமைந்துள்ளது.
இதேவேளை முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் பல முனைகளில் படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் சிலாவத்தைக்கு வட கிழக்கு கரையோரப் பிரதேசத்திலும் 58வது படைப் பிரிவினர் ஏ-34 வீதிக்கு வடக்கே புளியன்பொக்கரை ஏ-34 வீதிக்கு தெற்காக விசுவமடு பிரதேசத்திலும் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் இராமநாதபுரத்திற்கு கிழக்கிலும், விசுவமடுவுக்கு மேற்கிலும் படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோன்று இராணுவத்தின் நான்காவது செயலணியினர் புதுக்குடியிருப்பு தெற்கிலும் இரண்டாவது செயலணியினர் உடையார் கட்டுக்குளம் பிரதேசத்திலும் மூன்றாவது செயலணியினர் கல்மடு குளம், உடையார் கட்டுக்குளம் பகுதிகளிலும் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சுண்டிக்குளத்தைக் கைப்பற்றிய இராணுவத்தின் 55வது படைப் பிரிவினர் தற்பொழுது அதன் தென் பகுதி ஊடாக முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இந்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மோதல்களின் பின்னர் நடத்திய தேடுதலின் போது, கொல்லப்பட்ட புலிகளின் ஆறு சடலங்களையும் பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
அத்துடன் புலிகளின் கென்டர் ரக வாகனம் ஒன்றின் மீதும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் படையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே, கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க, விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment