அவசர வேண்டுகோள்
சிறிலங்கா அரசினால் இலங்கைத் தீவில் தொடர்ச்சியாக தமிழர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு மின்னஞ்சல்கள் மூலம் தெரியப்படுத்துமாறு அனைத்து தமிழ் மக்களையும் அழைக்கின்றோம்.
http://tamilidpcrisis.org/urgentAppeal/postcard.php இணையத்தளத்தில் உள்ள மின்னஞ்சலில் உங்கள் தரவுகளை இட்டு மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கலாம்.
இந்த மின்னஞ்சல் மூலம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கைத்தீவில் தற்போது நடைபெறும் அவலங்களை எடுத்துரைப்பதுடன் அவர்களிடம்,
- சிறிலங்கா அரசாங்கத்தின் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வானூர்தி குண்டுவீச்சுக்களை நிறுத்துதல்
- இடம்பெயர்ந்த மக்களுக்கான அவசர உதவிகளை வழங்குதல்
- அனைத்துலக உதவி நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல சிறிலங்கா அரசினை அனுமதிக்க வைத்தல்
- அனைத்துலக ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று சுயாதீனமான செய்திகள் வெளிவருவதற்கு வழி செய்தல்
- தமிழர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்டுச் செய்யப்படும் இப்பாரிய மனித உரிமை மீறல்களை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் அவசர தீர்மானம் பிரகடனம் செய்தல்
ஆகிய வேண்டுகோள்களை முன்வைக்கின்றது.
பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பி இலங்கைத் தீவில் அவதியுறும் தமிழ் உறவுகளின் துயர்துடைக்க முன்வருவீர்!.
0 விமர்சனங்கள்:
Post a Comment