முல்லைத்தீவு மேற்கு படையினர் வசம்
முல்லைத்தீவின் மேற்குப்பகுதிக்குள் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்த்தாக்குதலுக்கு மத்தியில் படையினர் நுழைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை விசுவமடு பகுதியில் படையினர் தங்கள் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளை விஸ்தரித்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறுகையில்;
கல்மடுக்குளத்திலிருந்து ஆரம்பிக்கும் நெத்தலி ஆற்றுப் பகுதியை லெப். கேணல் சேனக்க விஜயசூரிய தலைமையிலான 57 4 ஆவது படையணி வியாழக்கிழமை மாலை கடந்து சென்றுள்ளது.
விடுதலைப் புலிகள் கடும் பதில் தாக்குதலைத் தொடுத்த போதும் அதனையும் முறியடித்தவாறு படையினர் முன்னேறிச் சென்றுள்ளனர்.
இதேநேரம், தேராபுரம் பகுதியில் 58 ஆவது படையணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடும் சமர் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் வியாழக்கிழமை ஆங்காங்கே கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
இதேவேளை, உடையார்கட்டுக்குளத்தின் மேற்குப்பகுதியில் வியாழக்கிழமை விசேட படையணிஐஐ புலிகளின் முக்கிய முகாமொன்றைக் கைப்பற்றியுள்ளது.
இப் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தரைப்படைகளுக்கு ஆதரவாக நேற்றுக் காலை விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் முல்லைத்தீவில் மூன்று பகுதிகளில் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
எம்.ஐ24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்களும் இந்தப் பகுதிகளில் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment