மாதா சிலையை உடைத்தவர்கள் யார்?
நத்தார் தினத்திற்கு முதல் நாள் 24.12.08 அன்று பரந்தன் பகுதியிலே உள்ள மாதா சிலை இலங்கை விமானப்படை வீசிய குண்டினால் சேதமடைந்ததாகவே இணையதள செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
சிலையின் தலையை படம் எடுக்கும்போது மாதாவின் காலடியில் வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதும் மிகத்தெளிவாக தெரிகிறது. கீழே உள்ள படத்தைப்பார்க்கவும்
மேலேயுள்ள மாதா சிலையை உற்று நோக்கினால் மாதா சிலையின் அடிவாரத்திலுள்ள மாதாவின் முகத்திலே எதுவித துப்பாக்கிச் சன்னங்கள் அல்லது குண்டு பட்டதற்குரிய அறிகுறிகள் எதுவுமேயில்லை.
மேலே உள்ள படத்தில் இருப்பது போல் மாதாவின் தலை அந்த இடத்தில் காணவில்லை
அதுமட்டுமல்ல.. மாதா சிலை இருந்த அந்த சிறிய கடடத்திலும், மற்றும் மாதா சிலையின் எந்தப்பகுதியிலுமே துப்பாக்கி சன்னங்கள் அல்லது குண்டு பாய்ந்ததற்கான அடையாளங்களும் இல்லை.அப்படியானால் மாதாவின் தலை எவ்வாறு கீழே விழுந்தது? படைகள் புலிகளின் நிலைகள் நோக்கி பாரிய குண்டுகளை வீசும் போது அதிர்ச்சியால் தலைப்பகுதி விழுந்துவிட்டது என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக்ககொண்டால்… தலைப்பகுதி எவ்வாறு உடையாமல் அப்படியே உள்ளது என்ற கேள்வி எழுகின்றது. எனவே மாதாவின் தலைப்பகுதி வேண்டுமென்று அடித்து உடைக்கப்பட்டு மாதாவின் காலடியில் வைக்கப்பட்டிருப்பது மிகத்தெளிவாகிறது.
இவ்விடயத்தை வெளிநாட்டு ஊடகங்கள் நன்கு உணர்ந்தபடியால் தான் இவ்விடயம் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் எதுவும் கண்டு கொள்ளவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருப்பினும் உண்மையை அறிந்தவர் அந்த மாதா மட்டும்தான். அவ இவ்வுலகிற்கு உண்மையை எடுத்துச்சொல்லுவாரா??????






0 விமர்சனங்கள்:
Post a Comment