ஈபிடிபியினரால் யாழில் நடாத்தப்பட்ட பேரணியின் படங்கள்
யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பகுதியில் ஈபிடிபியினரின் அழைப்பின் பேரில் கிளிநொச்சி மீட்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தும் முல்லைத்தீவில் புலிகளால் போர்க் கவசங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க கோரியும் மாபெரும் மக்கள் பேரணி ஒன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு ஆவரங்கால் சிவன் கோவில் மைதானத்தின் முன்றலில் முற்பகல் ஆரம்பமான இந்த பேரணி அச்சுவேலி யூனியன் மைதானத்தை வந்தடைந்த போது அங்கு பொதுக்கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு பனை அபிவிருத்திச் சபையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிவதாசன் தலைமை தாங்கிச்சென்றார். இந்தப் பேரணியில் ஈபிடிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் உதயன், வலி கிழக்கு பொறுப்பாளர் தர்மராசா மற்றும் வடமராட்சி கிழக்கு முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ஐயாத்துரை ரங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
படங்களை பெரிதாக காண படங்களின் மேல் கிளிக்கவும்.........






0 விமர்சனங்கள்:
Post a Comment