கிளிநொச்சி வீழ்ந்து விட்டது; இனி எதற்கு அரசியல் தீர்வு?
கிளிநொச்சியும் இராணுவத்திடம் வீழ்ந்துவிட்ட பிறகு, இனி தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்ற ஒன்றை வழங்கவேண்டிய அவசியமே கிடையாது. எனவே, அரசியல் தீர்வு முயற்சிகளுக்காக உருவாக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அரசு உடனடியாக கலைத்துவிடவேண்டும்.
இப்படி வலியுறுத்தியிருக்கிறது ஜே.வி.பி. சார்பு அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையம்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அந்த அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைப்பின் செயலாளரும் ஜே.வி.பியின் பிரசார செயலாளரும், எம்.பியுமான விஜித ஹேரத்தே இவ்வேண்டுகோளை விடுத் தார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
கிளிநொச்சியைப் புலிகள் கைவிட்டமை அவர்களுக்கு யுத்த ரீதியாகக் கிடைத்த
தோல்வி மாத்திரமின்றி உளவியல் ரீதி யாகவும் கிடைத்த தோல்வியாகும்.
கிளிநொச்சி புலிகளின் தலைநகரமாக விளங்கியது. இந்த நகரில்தான் புலிகளின் சமாதான செயலகம் உட்படப் பல அலு வலகங்கள் இருந்தன. படையினர் மீதான பாரிய தாக்குதல்களுக்கான திட்டங்கள் அங்கிருந்துதான் வகுக்கப்பட்டன.
இவ்வாறானதொரு முக்கிய நகரம் பறிபோயுள்ளதால் புலிகள் உளவியல் ரீதியாகத் துவண்டுபோயுள்ளனர்.
இந்த வெற்றியை இந்நாட்டுக்குப் பெற்றுத்தந்த படையினருக்கு நாம் எமது கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். படையினர் தொடர்ந்து முன்னேறுவதற்கு இந்நாட்டு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்கவேண்டும்.
தோல்வியடைந்த புலிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.இது தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.
இந்த நிலையில் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசப்படுகிறது. அதிகாரப் பகிர்வு என்பது மற்றுமொரு பிரிவினைவாதத்திற்கே வழிவகுக்கும். யுத்தம் மூலம் புலிகளைத் தோற்கடிப்பதுதான் ஒரேதீர்வு.
ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லை. அரசியல் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உடன் கலைக்கப்படல் வேண்டும். அக்குழு அறவே தேவையற்ற ஒன்று என்றார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment