புலிகளுடனான பாரிய மோதலின் பின் இரணைமடுச் சந்தியும் படையினரிடம் வீழ்ச்சி
வன்னி முன்னகர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 57 ஆவது படையணியினர் இன்று (01) காலை இரணைமடு சந்தியைக் கைப்பற்றியதாகப் பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
படையினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம் பெற்ற பாரிய மோதலின் பின்னரே இந்தச் சந்தியைக் கைப்பற்றினா.
கிளிநொச்சியிலிருந்து 6 கிலோ மீற்றர் தெற்கே அமைந்துள்ள இந்த இரணைமடுப் பிரதேசம் புலிகளின் முக்கிய தளமாகக் கருதப்படுகின்றது. புலிகள் தமது முழுப் பலத்தையும் ஒன்று திரட்டி இதனைப் பாதுகாக்க முயன்றபோதும் இராணுவத்தின் 57 ஆவது படையணியினர் புலிகளை முறியடித்து இப்பிரசேதத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment