இவ்வாண்டில் யுத்தம் முடிவிற்குவரும் சாத்தியமில்லை
ஆ.அருண் 1/1/2009 4:23:07 PM -
2009ம் ஆண்டில் யுத்தம் முடிவிற்கு வரும் சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை என தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவிக்கின்றார்.
இந்த வருடம் யுத்த வெற்றி ஆண்டாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் புதிய வருடத்தில் யுத்தம் நிறைவிற்கு வருமா என வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது (2009ம் ஆண்டில் யுத்தம் முடிவிற்கு வரும் என நிச்சயமாக நான் கருதவில்லை இதற்கு காரணமாக விடுதலைப்புலிகளின் முப்பரிமாணங்களை என்னால் எடுத்துரைக்கமுடியும் விடுதலைப்புலிகளுக்கு மரபுபோரை முன்னெடுக்கின்ற பரிமாணம் அதிலொன்றாகும் அதிலே தரை கடல் ஆகாய படைப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன இரண்டாவதாக அவர்களிடம் கெரில்லா கரந்தடிப்பரிமாணம் உள்ளது மூன்றாவதாக அவர்களிடம் பயங்கரவாதத்தாக்குதல்களை நடத்தும் பரிமாணம் காணப்படுகின்றது தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கம் அதிஉச்சபட்டவிலையைக்கொடுத்து இராணுவத்தை உள்ளே அனுப்பி விடுதலைப் புலிகளுடைய மரபுபடைபரிமாணத்தின்மீதே கவனத்தைச்செலுத்திசெயற்பட்டுவருகின்றது.
அரசதரப்பு செய்திகளின் படி அரச படைகள் முன்னேறி நிலப்பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பதாகவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்களை கணிசமான அளவுகொன்று குவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது அண்மைய மோதல்களின் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்களை விடவும் இராணுவத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் மிகவும் அதிகமாகும் என எனக்கு கிடைத்த தகவல்கள் மூலம் அறிந்துகொண்டேன் இருந்தபோதிலும் எமக்கு காணக்கிடைப்பவை மற்றும் வாசிக்க கிடைப்பவை மூலம் அன்றேல் கூறப்படுபவையை எடுத்துப்பார்க்கின்றபோது இராணுவம் உண்மையிலேயே முன்னேறிச்செல்வதாகவே அறியமுடிகின்றது.
விடுதலைப்புலிகளின் மரபுபோர்ப்பரிமாணத்தைப்பார்க்கின்றபோது அதன் ஆயுதபலம் இன்னமும் உறுதியாக இருப்பது உண்மைதான் இதுவரையில் விடுதலைப்புலிகளது விமானங்கள் ஏதும் அழிக்கப்பட்டது தொடர்பாக நாம் எதையும் கேட்கவில்லை அன்றேல் அவர்களது ஆட்டிலறி ஏவுகுழல்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டமை தொடர்பாக நாம் அறியவுமில்லை அதைப்பார்க்கவுமில்லை எமக்கு அவ்வாறான அழிப்பு புகைப்படங்கள் காண்பிக்கப்படவுமில்லை அந்தவகையில் விடுதலைப்புலிகளின் ஆயுதபலம் தொடர்ந்துமிருக்கின்றபோதிலும் இராணுவத்தினர் முன்னோக்கிச்செல்லுகின்றபோது விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பகுதி குறைவடைந்துசெல்கின்றபோது விடுதலைப்புலிகள் வசமுள்ள ஏனைய பகுதிகளும் இராணுவத்தினரின் சூட்டெல்லைக்குள் வந்துவிடக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றது இதன் பின்னர் சூட்டாதரவின் பலத்துடனேயே இராணுவத்தினர் விடுதலைப்புலிகளிலும் அதிக சூட்டாதரவுப்பலத்தை கொண்டுள்ள இராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது முழுவீச்சுத்தாக்குதலால் அவர்களை ஆட்கொள்ளக்கூடிய நிலை ஏற்படலாம் அப்படியான கட்டத்தில் பொதுமக்களுக்கு அதிகப்படியான இழப்புக்கள் ஏற்படக்கூடும் தற்போதைய நிலையில் பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்படுகின்றபோதும் அது குறைவாககாணப்படுகின்றது.
ஆனால் அது எதிர்காலத்தில் மாற்றமடையலாம் ஆனால் அரசாங்கத்திற்கு உள்ள பிரச்சனையாதென்றால் விடுதலைப்புலிகளது மரபுப்படைப்பலத்தை முறியடிக்க முடிந்தாலும் விடுதலைப்புலிகளின் கெரில்லா மற்றும் பயங்கரவாத தாக்குதல் வல்லமையை முறியடிக்கும் சாத்தியம் காணப்படவில்லை கொழும்பு போன்ற பகுதிகளுக்கு வந்து குண்டுத்தாக்குதல்களை நடத்துவது அன்றேல் அநுராதபுர வான்படைத்தளத்திற்குள் நுழைந்து அழித்தொழிப்பு தாக்குதலை நடத்தியது போன்ற புலிகளின் வல்லமையை அரசாங்கத்தினால் ஒழித்துவிடமுடியாது விடுதலைப்புலிகள் மரபுபடைப்பலத்தை முறியடித்துவிட்டால் அவர்களது ஏனைய வல்லமைகள் சீர்குலைந்து வீழ்ச்சிகாணும் என அரசாங்கம் கணக்குப்போட்டுள்ளது ஆனால் அது நடைபெறும் சாத்தியம்காணப்படவில்லை 1988 89 காலப்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியை அடக்கியதில் இருந்து ஆதர்ஸயத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் விளைகின்றது ஜேவிபியின் தலைமைத்துவத்தை இல்லாமல் செய்ததன் மூலமாக ஜேவிபியின் கிளர்ச்சிக்கட்டமைப்பு துரிதகதியில் வீழ்ச்சிகண்டது ஆனால் விடுதலைப்புலிகளுக்கும் அதற்கும் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது விடுதலைப்புலிகளுக்கு நீண்ட வரலாறு காணப்படுகின்றது விடுதலைப்புலிகள் அமைப்பு என்ற வகையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு உள்ளது அதனைத்தவிர மிகவும் பலம்வாய்ந்த நிர்வாகக்கட்டமைப்பை அது ஏற்படுத்தி செயற்பட்டு வருகின்றது
அதற்கும் பின்னணியில் 6தசாப்பதங்களுக்கும் மேலான தமிழ் இன உணர்வு சிந்தனைகள் தேசிய வாதம் என்பன விடுதலைப்புலிகளுக்கு பலம் சேர்த்துநிற்கின்றன இது ஒரு இனப்பிரச்சனை என்ன வகையில் அடிமுதல் நுனிவரை அனைத்துதரப்பு தமிழ் சமூகமும் விடுதலைப்புலிகளின் தேசியவாதத்திற்கும் உரிமைப்போராட்டத்திற்கும் ஆதரவாக உள்ளன அந்தவகையில் ஜேவிபி போன்ற கதி விடுதலைப்புலிகளுக்கும் ஏற்படும் என நான் கருதவில்லை விடுதலைப்புலிகள் கெரில்லா அமைப்பு என்ற வகையில் சின்னாபின்னமாகிவிடும் சாத்தியம் இல்லை என்றே கூறவேண்டும் வெறுமனே நிலப்பிரதேசங்களை கைப்பற்றுவதனுடாக விடுதலைப்புலிகளை முழுமையாக தோற்கடித்துவிடமுடியாது அந்தவகையில் யுத்தம் தொடர்ந்தும் முன்னெல்லப்போகின்றது என்றே நான் கருதுகின்றேன் புதுவருடத்தில் அதற்கு ஒரு முடிவுவரும் என நான் கருதவில்லை) என தெரிவித்துள்ளார்.
virakesari
0 விமர்சனங்கள்:
Post a Comment