நோயாளிகளை சமாளிக்க முடியாமல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை திணறல்
இலங்கையின் வடக்கே வன்னிப்பகுதியில் தொடரும் தீவிரமான யுத்தச் சூழ்நிலையில் இடம் மாறாமல் செயற்படுகின்ற ஒரேயொரு மருத்துவமனையாக புதுக்குடியிருப்பு மருத்துவமனை விளங்குகின்றது.
தொடரும் எறிகணை வீச்சுக்கள், மோதல்நிலைமைகள், இடப்பெயர்வுகள் காரணமாக புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் பெரும் எண்ணிக்கையான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அந்த மருத்துவமனையில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவர் பரதனாலிங்கம் சத்தியரூபன் கூறுகின்றார்.
மேலும், போர்க்காயங்களுக்கு உள்ளாகிய 23 நோயாளிகளை சனிக்கிழமை வவுனியாவுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது கைகூடவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
முக்கிய மருந்துகள் மற்றும் ஆட் பற்றாக்குறைக்கு மத்தியில் புதுக்குடியிருப்பு மருத்துவமனை தன்னால் இயன்ற சேவையை போர்ச் சூழலில் சிக்கியுள்ள வன்னிப்பிரதேச மக்களுக்கு வழங்கி வருவதாகவும் டாக்டர் சத்தியரூபன் குறிப்பிடுகின்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment