வன்னி மக்களின் பரிதாபநிலை தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு வன்னியில் பணிபுரியும் கத்தோலிக்க திருச்சபை கடிதம்
வன்னியில் தினமும் இடம்பெற்றுவரும் விமானத்தாக்குதல்கள் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் அடிப்படை வசதியற்ற நிலையில் அவலப்படும் வன்னி மக்களின் பரிதாபநிலை தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு வன்னியில் பணிபுரியும் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த குருக்கள், துறவியர்கள் அவசர கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளனர். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கை அரசினால் நடத்தப்படும் புலிகளுக்கு எதிரான தொடர் இராணுவ நடவடிக்கையினால் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் விடுவிக்கப்படாத பகுதிகளாகிய வன்னி மாவட்டங்கள் என அழைக்கப்படும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகள் யாழ். மாவட்டத்டதின் சில பகுதிகள், வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகள் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு லட்சத்து தொண்ணு}று ஆயிரம் மக்கள் செல் வீச்சினால் தினமும் இடம்பெயர்ந்து வருகின்றனர். மிக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் மீது திணிக்கப்படும் அவர்களது அடிப்படைய தேவைகளான உணவு, தண்ணீர், வைத்திய போக்குவரத்து வசதிகள் என்பன முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. எனவே அர்த்தமற்ற இப்போரை நிறுத்துவதற்கு வழிசெய்யுங்கள். வன்னியில் துன்ப துயரங்களுக்குள்ளாகி உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துன்பங்களை துடைக்க வழி செய்யுங்கள். அவர்களை அங்கிருந்து மீட்கவும், போரில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரையும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் திரும்பவும், இதன்மூலம் நிரந்தர அரசியல் தீர்வை பெற்று போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வழி செய்யவும், என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment