அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்
TMVP பியில் உள்ள அனைத்து சிறுவர் போராளிகளையும் ஜனவரி 24ம் திகதிக்குள் விடுவிப்பு?
கிழக்கு மாகாணமுதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பில் மேற்படி தெரிவித்தார். ரி.எம்.வி.பியில் இருக்கின்ற சிறுவர் போராளிகளை விடுவித்து அவர்களுக்கான புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.
இதில் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், எமது ரி.எம்.வி.பி அமைப்பில் இருக்கின்ற மிகக் குறைந்தளவிலான சிறுவர் போராளிகளை ஜனவரி 24ம் திகதிக்குள் விடுவிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் இடம் பெற்று வருவதாகவும், அவர்களை விடுவித்து அவர்களுக்கான புனர்வாழ்வு அளிக்குமுகமாக குறிப்பிட்ட சில சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி , அவர்கள் வருமானங்களை ஈட்டிக்கொண்டு தங்களது எதிர்கால வாழ்வினை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாகவும் இதற்கு அமெரிக்க அரசு இயன்றளவு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதல்வர், எங்களது அமைப்பிடம் சுயபாதுகாப்பிற்காக வைத்திருக்கின்ற ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலம் மிகவெகு விரைவில் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதம் முற்றுமுழுதாக ஒழிக்கப்படுகின்ற போது எமது ஆயுதங்களை நாங்கள் இயல்பாகவே ஒப்படைத்து விடுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து குறிப்பிட்ட அவர், அமெரிக்காவிலிருந்து நேரடியாக எமது கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கண்டதோடு, அது தொடர்பில் அமெரிக்க அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திப் பணிகளுக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இச் சந்திப்பில் தெற்கு ஆசியப் பிராந்தியத்திற்கு பொறுப்பான இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தோமஸ் எல் கொனற் , அமெரிக்க தூதரக தலமைப் பொறுப்பதிகாரி லெப்ரினன் கேணல் லோரன்ஸ் ஏ ஸ்மித், தெற்காசிய விபகாரங்களுக்கான அமெரிக்க இராணுவ கொள்கை வகுப்பாளர் லெப்ரினன் ஜென்றல் மைக்கல் பெற்றி குறூ, அமெரிக்க அபிவிருத்தி நிறுவனங்களுக்கான தலமைப் பொறுப்பதிகாரி றெபேக்கா கொயின் , ரி.எம்.வி.பியின் ஊடகப்பேச்சாளரும் முதலமைச்சரின் இணைப்புச்செயலாளருமான ஆஸாத் மௌலானா மற்றும் முதலமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி. கே. விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment