புதுக்குடியிருப்பின் தென்பகுதியையும் கைப்பற்றி விட்டனராம்: பாதுகாப்பு அமைச்சு
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பின் தென் பகுதியை இராணுவத்தின் 59வது படைப்பிரிவு கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பகுதியில் விடுதலைப் புலிகளின் படகு கட்டும் இடங்களும், முன்னணி முகாம்களும் காணப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் மீட்கப்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து 12 இலகுரக ஆயுதங்களும் மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இந்த மோதல்களில் விடுதலைப் புலிகளின் 7 சடலங்களை மீட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
இதேவேளை, இராணுவத்தினரின் 14வது கஜபா ரெஜிமன்ட் படையணி மருதப்பாவெளிப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம்களை மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகள் மற்றும் 2 கட்டடங்கள், தற்காலிக முகாம்கள் போன்றன மீட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லங்காஈவாட்ச்
0 விமர்சனங்கள்:
Post a Comment