எப்போ திறக்கும் இந்தப் பாதை?
இந்தப் பாதை எப்போ திறக்கும்
இனிய நண்பா உன்னைத்தான்
கப்பலுக்காக காத்திருந்தோம்
இன்று போகாதாம் நாளையாம்
நாளைக்கும் போகாதாம்
நாயாய் அலைந்தோம்
கிளாலி கொம்படி
கிலிகொண்ட பாதை
முகமாலை முந்திய பாதை
முடக்கப்பட்டு கிடக்கிறதே
முறிகண்டி பிள்ளையாரே
முருகா நல்லூரானே
நலமான பயணத்திற்காக
நம்பி காத்திருக்கிறோம்
தம்பி எப்ப திறக்கும்
வெம்பி அழுகிறேன்
பிள்ளைக்கு பிரசவம்
பிந்தாமல் போகணும்
வெண்ணிலாவை பார்க்கணும்
வெந்நீர் வார்க்கணும்
சு.வரதன்
0 விமர்சனங்கள்:
Post a Comment