ஏன் பிறந்தோம்?
இந்த நாட்டில் ஏன் பிறந்தோம்?
இன்னல்களை சுமந்தே
காலங்கள் போகுதடா
காத்தவராயன் கழுமரம்
ஏறியதுபோல் நாமும்
தவிக்கின்றோம் இங்கே
காப்பாற்ற எவர் வருவார்
காணாத தூரத்தில் அமெரிக்கா
கண்டும் காணாததுபோல இந்தியா
என்றும் சுடுகாட்டு
வாழ்வு இங்கே
சீனாவும் எமை
பார்த்து சிரிக்கின்றான்
சிக்கலான வலைக்குள்
சிறகொடிந்தோம்
இறக்கைகள் தரும்
நோர்வே எங்கே?
இலக்கு தவறிப்போனதுவோ?
மாங்காய் நாடு மாண்புமிகு
தெருத் தேங்காயானதா மன்னா?
நீயே கண்ணன் என்றால்
இனி காப்பது யார்?
இவ்வுலகமே வியப்பாக
பார்க்கிறதே
இனிய நாடாகுமா எம் நாடு!
0 விமர்சனங்கள்:
Post a Comment