பொது மக்களின் பாதிப்புக்கு புலிகளே பொறுப்பாளிகள்
இராணுவ நடவடிக்கை மேற்கொள் ளப்படும் வன்னிப் பிரதேசத்தில் தமிழ் மக்களை அரசாங்கம் கொன் றொழிக்கின்றது எனக் கூறிச் சென் னையிலும் மேற்கத்திய நாடுகளின் நகரங் கள் சிலவற்றிலும் கண்டனப் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன. சென் னையில் சில அரசியல் கட்சிகள் இவற்றை ஏற்பாடு செய்கின்றன. மேற்கத்திய நகரங்க ளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமி ழர்கள் இவற்றை ஏற்பாடு செய்கின்றார்கள்.
கண்டனப் பேரணிகளையும் ஆர்ப்பாட்ட ங்களையும் ஏற்பாடு செய்பவர்கள் வன்னிப் பிரதேசத்தின் உண்மை நிலையை அறியா மல் இவற்றைச் செய்கின்றார்களா அல்லது தமிழ் மக்களின் நலனுக்குப் புறம்பான வேறு நோக்கங்களுக்காகச் செய்கின்றார்களா என் பது பிரதான கேள்வியாக எழுந்துள்ளது.
தற்போதைய இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் மரணமடைவதும் காய மடைவதும் இடம்பெறவில்லை எனக் கூறு வதற்கில்லை. ஆனால் முன்னைய இரா ணுவ நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களின் பாதிப்பு மிகக் குறைவு. இராணுவ நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடையும் வரை பொது மக்களுக்குப் பாதி ப்பு ஏற்படவேயில்லை. பின்னர் பாதிப்பு ஏற்பட்டதற்குப் புலிகளே முழுப் பொறுப் பையும் ஏற்கவேண்டும்.
இரு தரப்பும் எதிரெதிராகப் போரிடும் போது இடையில் சிக்கும் மக்கள் பாதிப் புக்கு உள்ளாகுவர். மக்கள் இடையில் சிக் கும் நிலையைத் தவிர்க்க வேண்டியது மோத லில் ஈடுபடும் இரு தரப்பினரதும் தார்மீகப் பொறுப்பு. புலிகள் இப் பொறுப்புக்கு அமைவாகச் செயற்படாததாலேயே பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது.
வன்னியில் இராணுவ நடவடிக்கை ஆரம் பிக்கப்பட்டபோது, அரச கட்டுப்பாட்டுப் பிர தேசத்துக்கு வருமாறு அங்குள்ள மக்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தது. அம் மக் கள் வன்னியிலிருந்து வெளியேறுவதற்குப் புலிகள் அனுமதிக்கவில்லை. புலிகளுக்கு மறை ந்து ஒரு சிலர் வந்தார்கள். அப்படி வந்தவர் களின் எண்ணிக்கை குறைவு. அரச கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்கு வர முயற்சித்த ஒரு குடும்பத்தின் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமும் இடம்பெற்றிருக்கின் றது. மற்றவர்களை அச்சுறுத்துவதற்காகவே இத்துப்பாக்கிச் சூடு.
இராணுவ நடவடிக்கை இறுதிக் கட்ட த்தை அடைந்த நிலையில், முல்லைத்தீவில் ஒரு பிரதேசத்தைப் பாதுகாப்புப் பிரதேசம் என அரசாங்கம் பிரகடனப்படுத்தியது. அப் பிரதேசத்துக்கு வருமாறு பொதுமக்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தது. பொதுமக் கள் அங்கு செல்லவிடாமல் புலிகள் தடுத்து வைத்திருக்கின்றார்கள்.
தடையை மீறிப் பாது காப்புப் பிரதேசத்துக்குச் சென்ற மக்களைப் பழிவாங்கும் வகையில் அம்மக்கள் மத்தி யிலிருந்து படையினர் மீது ஏவுகணைக ளைச் செலுத்துகின்றார்கள். பதிலடியாக இப் பிரதேசத்துக்குப் படையினர் ஏவுகணைத் தாக் குதல் நடத்தினால் பொதுமக்கள் பாதிக்கப் படுவார்கள் என்பது இவர்களுக்குத் தெரியா ததல்ல. பாதுகாப்புப் பிரதேசத்தில் கூடியிரு க்கும் மக்கள் மத்தியில் ஏவுகணைகளைப் பொருத்த வேண்டாம் என்று யாழ்ப்பாண ஆயர் புலிகளுக்கு வேண்டுகோள் விடுத் ததை இங்கு குறிப்பிட்டுக் கூறலாம். காய மடைந்த 200 பொதுமக்களை வவுனியாவு க்குக் கொண்டுவருவதற்குச் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கம் முயற்சி மேற்கொண்ட போதிலும் புலிகள் அதற்கு இடமளிக்கவி ல்லை என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
புலிகள் தங்களைப் பாதுகாப்பதற்கான மனிதக் கேடயமாகப் பொதுமக்களைத் தடு த்து வைத்திருப்பதாலேயே பொதுமக்களுக் குப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த உண்மை நிலையைப் புரியாமல் தவறான தகவல்களின் அடிப்படையில் ஆர்ப்பாட்ட ங்கள் செய்பவர்கள் பொதுமக்களுக்குப் பாதி ப்பு ஏற்படுத்துபவர்களுக்குத் துணைபோகி ன்றார்கள். வன்னி மக்கள் பாதிப்புக்கு உள் ளாகக் கூடாது என்பதில் உண்மையாகவே இவர்களுக்கு அக்கறை இருக்குமானால், அம்மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வதை அனுமதிக்குமாறு புலிகளிடம் வேண்டுகோள் விடுக்கவேண்டும்.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment