யாழ். கோண்டாவிலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்
யாழ். கோண்டாவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை இரத்தினசிங்கம் (வயது 53) என்பவரே யாழ்ப்பாணம் கோண்டாவில் அரசினர் ஆஸ்பத்திரிக்கு அண்மையிலுள்ள நாராயணன் ஒழுங்கைப் பகுதியில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரதேச மக்களின் தகவலின்படி நேற்றிரவு 11 மணியளில் சைக்கிளுடன் அவரது சடலம் அவ்விடத்தில் போடப்பட்டிருக்க வேண்டும் என தெரிய வருகின்றது. அப்பகுதி கிராம உத்தியோகத்தர் முருகையா தகவல் தருகையில் கொல்லப்பட்டவர் திருமணமாகாதவர் என்பதுடன் தாவடி பகுதியில் சுருட்டு சுற்றும் தொழிலை மேற்கொள்பவர் என்றும் தெரிவித்துள்ளார். இக்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment