பிரபாகரன் உயிர் பாதுகாப்புக் கோரி சுவிஸிலுள்ள பிரமுகர்களுடன் தொலைபேசியில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது
முல்லைத்தீவு நகரையும் அதனையண்டியுள்ள சில பிரதேசங்களும் உள்ளடங்கலாக குறுகிய பிரதேச பரப்பிற்குள் அரச படையினரால் புலிகள் இயக்கமும் அதன் தாக்குதல் நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உயர்மட்டத் தலைவர்களும் தற்போது முல்லைத்தீவில் தான் பதுங்கியிருக்கிறார்களா அல்லது தப்பியோடிவிட்டனரா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தான் கடந்த தைப்பொங்கல் தினம் இரவு 8 மணிக்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் செய்மதித் தொடர்பு தொலைபேசி மூலமாகப் பிரபாகரன் சுவிற்சர்லாந்திலுள்ள சில சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசியிருப்பது தெரியவந்துள்ளதாகப் பாதுகாப்புத்துறையின் புலனாய்வுப் பிரிவுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பிரபாகரனும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் இவருக்கு அடுத்த தரங்களில் உள்ள தலைவர்களும் இன்னும் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் அரசபடையினரால் விடுவிக்கப்படாத ஏதோ ஒரு பகுதியிலோ அல்லது முல்லைத்தீவு நகரப்பகுதியிலோ பதுங்கியுள்ளார்கள் என்பது தெரியவருகிறது.
மேலும் கடந்த பொங்கல் தினம் இவ்வாறு சுவிற்சர்லாந்திலுள்ள குறிப்பிட்டதொரு சர்வதேச நிறுவனத்தின் தலைவருடனோ அல்லது ஒருசில சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களுடனோ பிரபாகரன் செய்மதித் தொலைபேசி மூலம் அவசரமாகத் தொடர்புகொண்டு விடுத்திருக்கும் கோரிக்கையைப் பார்க்கும் போது பிரபாகரன், குடும்பத்தினர், உயர்மட்டத் தலைவர்கள் ஆகிய அனைவரும் தற்போது முல்லைத்தீவை விட்டுத் தப்பிச் செல்ல முடியாதவாறு அரச படையினரின் பாரிய சுற்றிவளைப்பில் சிக்கியிருப்பதும் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவுத் தரப்பில் கருதப்படுகிறது. ஏனெனில் அன்று இரவு 8 மணிக்கு மேல் பிரபாகரன் சுவிற்சர்லாந்திலுள்ள சர்வதேச நிறுவனம் மற்றும் சுவிற்சர்லாந்து அரச தரப்பு முக்கியஸ்தர்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கையில் தனக்கும் குடும்பத்தினர் மற்றும் உயர்மட்டத் தலைவர்களுக்கும் பெரும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டிப்பதாகவும் தம்மைக் காப்பாற்ற உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார். இதிலிருந்து பிரபாகரனும் ஏனையோரும் முல்லைத்தீவில் எங்கோ ஒரு நிலக்கீழ் நிலையத்திலேயே பதுங்கியிருப்பதாகவும் அவர்களுக்கு அரசபடையினரிடமிருந்து தப்பிச் செல்வதற்கான வேறு வழிகள் கிடையாதென்பதும் தெரியவருகிறது.
இவ்வாறு முல்லைத்தீவில் எங்கோ ஒரு நிலையத்திலிருந்து செய்மதித் தொடர்பு தொலைபேசி மூலம் சுவிற்சர்லாந்துக்கு இவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டதை பிரபலமான ஒரு சர்வதேச புலனாய்வு அமைப்பே முதலில் அவதானித்துள்ளது. குறித்த செய்மதித் தொலைபேசித் தொடர்பை மேற்கொண்டது சர்வதேச பயங்கரவாத அமைப்பாகிய புலிகள் இயக்கம் என்பதால் குறித்த செய்மதித் தொடர்புகளைத் தொடர்ந்து அவதானித்துத் தகவல்களைப் பெற்றுக் கொண்ட மேற்படி சர்வதேச புலனாய்வு அமைப்பு, பின்னர் ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்புத்துறையுடன் அவசரமாகத் தொடர்பு கொண்டு இதுபற்றி அறிவித்தது. குறித்த பிரபல புலனாய்வு அமைப்பு அரச பாதுகாப்பு எதிரணிகளுக்குத் தெரிவித்த தகவல்களுக்கேற்ப இவ்வாறு சுவிஸர்லாந்திலுள்ள சர்வதேச நிறுவனத் தலைவர்களுடன் செய்மதித் தொலைபேசி மூலம் முதலில் தொடர்புகொண்டது புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த தலைமை மட்டத்திலுள்ள புலித்தேவனே என்பதும் குறிப்பிட்டதொரு சர்வதேச தலைவருடன் புலித்தேவன் பேசியபின்பு தொலைபேசித் தொடர்பு பிரபாகரனுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து பிரபாகரனே குறிப்பிட்ட சர்வதேச அமைப்பின் தலைவருடனோ அல்லது அரசியல் பிரமுகருடனோ பேசியுள்ளார். அதன் பின்னர் குறித்த தைப்பொங்கல் தினம் இரவு பிரபாகரன் மேலும் இரண்டு தடவைகள் செய்மதித் தொலைபேசி மூலம் அவசரமாக சுவிற்சர்லாந்துக்குப் பேசியுள்ளார். இவ்வாறு தைப்பொங்கல் தினம் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் இடைவிட்டு மூன்று தடவைகள் பிரபாகரன் செய்மதித் தொடர்பு மூலம் அவசரமாகப் பேசியுள்ளார். ஏனைய இரண்டு அழைப்புகளின் போதும் பிரபாகரன் சுவிற்சர்லாந்தில் செயற்படும் புலிகள் இயக்கத்தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுடன் பேசியுள்ளார்.
பிரபாகரன் தனது குடும்பத்தினர் மற்றும் தலைவர்களின் உயிரைப் பாதுகாக்கும் பாதுகாப்பு நடவடிக்கையின் இறுதிக்கட்டமாகவே இவ்வாறு செய்மதித் தொலைபேசிமூலம் சுவிற்சர்லாந்தில் செயற்படும் பிரபல சர்வதேச அமைப்புகள் , அரசபிரமுகர்கள், புலிகள் இயக்கத்தலைவர்கள் ஆகியோரை அழைத்து அவசர உதவி கோரியுள்ளதாக மேற்படி சர்வதேச புலனாய்வு அமைப்புத் தரப்பிலும் ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவு தரப்பிலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் தீவிர சுற்றிவளைப்பு யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அரச படையினர் தரப்பிலும் பாதுகாப்புத்துறை தரப்பிலும் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப தற்போது பிரபாகரனும் அவரைச்சேர்ந்த முக்கிய நபர்களும் தற்போது புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு நிலக் கீழ் நிலையத்தில் பதுங்கியிருப்பதாகவும் பிரபாகரன் தனது பாதுகாப்புக்காக மனித கேடயங்களாகப் பொதுமக்களை அப்பகுதியிலும் ஏனைய முல்லைத்தீவுப் பகுதிகளிலும் பலாத்காரமாகத் தடுத்து வைத்திருப்பதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறான ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளதால்தான் பிரபாகரன் சுவிற்சர்லாந்திலுள்ள சர்வதேச நிறுவன அமைப்பினரின் தலைவர்களுக்கும் தனது சுவிற்சர்லாந்து தலைவர்களுக்கும் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.எவ்வாறான பாதுகாப்பு உதவிநடவடிக்கைகளை சுவிற்சர்லாந்திலிருந்து மேற்படி சர்வதேச அமைப்புத் தலைவர்களும் வெளிநாட்டுப் புலிகள் இயக்கப்பிரதிநிதிகளும் மற்றும் வெளிநாட்டு அரச தரப்புகள் எடுத்தாலும் ஸ்ரீலங்கா அரசின் உறுதியான யுத்த நிலைப்பாட்டையோ அல்லது அரசபடையினரின் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளையோ படையினரின் முன்னேற்றத்தையோ, வெற்றிகளையோ தடுத்துநிறுத்த முடியாது. இந்நிலையில் பிரபாகரன் முல்லைத்தீவிலிருந்து தப்பிச் செல்வது முடியாத காரியமாகவே இருக்கும். இதனாலேயே அண்மையில் முன்னாள் கிழக்குப் பிரதேச புலிகள் இயக்கத்தலைவரும் தற்போது புலிகள் இயக்கத்தினரதும் பிரபாகரனினதும் பரம எதிரியுமான கருணா தெரிவிக்கையில்;
பிரபாகரனுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் பின்னடைவான நிலையில் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். பாம்பின் கால் பாம்பு அறியும் என்றவகையில் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் தலைவிதிபற்றி முன்னாள் புலிகள் இயக்கத்தலைவர் ஒருவர் கூறுவது பெரும்பாலும் உண்மையாக முடியலாம்.
லங்காதீப: செய்தி விமர்சனம்
0 விமர்சனங்கள்:
Post a Comment