காயமடைந்தவர்கள் வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும்-ஐ நா
இலங்கையின் வடபகுதியில் இடம் பெற்று வரும் மோதல்களில் கடுமையான காயங்களுக்கு உள்ளான நூற்றுக் கணக்காணவர்களை மோதல் பகுதிகளிலிருந்து வெளியே கொண்டுவர மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக தாங்கள் முயற்சி எடுக்கவுள்ளதாக இலங்கையயிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் மிகவும் காயமடைந்தவர்களும் சிறார்களும் உட்பட குறைந்தது ஐம்பது பேர் அடங்குவர். அவர்களை மீட்டு வருவதற்காக சென்ற வாகனத் தொடரணி, புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டு பகுதியிலுள்ள் எல்லைக்கு அருகில் பல தினங்களாக சிக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறுகிறது.
விடுதலைப் புலிகள் அனுமதியளிக்கும் பட்சத்திலும், போரின் உக்கிரம் குறையும் பட்சத்திலும், வியாழக்கிழமை மதியம் வாக்கில் இந்த வாகனத் தொடரணி முன்னரங்கு நிலைகளை கடந்து செல்லும் என்றும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு மீட்கப்படுபவர்கள், வவுனியாவிலுள்ள சுகாதார அமைச்சகத்தின் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் ஐ நா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
BBC தமிழோசை
The Tamil Tigers have blocked hundreds of wounded civilians from leaving the Sri Lankan war for a second time.
United Nations officials have accused the Tamil Tigers of not allowing the injured - which include at least 50 seriously injured children - to leave.
The UN had asked for lull in fighting to allow a convoy of the wounded to cross the frontline, and added that it would try again.
Sri Lankan troops have cornered the Tamil Tigers in 115 sq miles of jungle, which is all the rebels control after a string of major losses since November.
The UN and International Committee of the Red Cross (ICRC) say 250,000 civilians are trapped in the fighting.
Many are forecasting a swift end to a 25-year separatist conflict that is one of Asia's longest-running wars after the latest advances by the Sri Lankan military.
The UN, the ICRC, the US, the European Union and others have demanded both sides keep civilians safe.
0 விமர்சனங்கள்:
Post a Comment