போர் நிறுத்தம் கோரி யாழ் ஆயர் உண்ணாவிரதம்
இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் போர்ச்சூழலில் சிக்கியுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மனிதாபிமான உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக்கோரி யாழ்ப்பாணத்தில் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவர்கள் தலைமையில் புதன்கிழமையன்று உண்ணாவிரதம் நடைபெற்றிருக்கின்றது.
இதேபோன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் மூன்றாவது நாளாக தமது வகுப்புக்களைப் பறக்கணித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றார்கள்.
வைத்திய வசதிகளின்றி வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவிகள் செய்யப்பட வேண்டும் எனவும் யாழ் ஆயர் கோரியுள்ளார். மக்கள் துயர் துடைப்பதற்கு மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் ஐ நா வின் தலைமைச் செயலருக்கு யாழ் ஆயர் அனுப்பியுள்ளார்.
அத்துடன் மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவுக்கு வருவதற்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் காத்திருக்கும் நோயாளிகளை அங்கு அனுப்பி வைக்க மனிதாபிமான ரீதியில் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் யாழ் ஆயர் வேண்டியுள்ளார்.
BBC தமிழோசை
0 விமர்சனங்கள்:
Post a Comment