இந்திய வெளியுறவுச் செயலர் யுத்தநிறுத்தம் குறித்து பேசவில்லை
இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச்செயலர் சிவ்சங்கர்மேனன் இந்நாட்டில் நடைபெறும்ட யுத்தம் தொடர்பாகவோ அல்லது யுத்தநிறுத்தம் பற்றியோ இலங்கை அரசுடன் எதுவும் பேசவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் இடம்பெறும் பயங்கரவாதம் உட்பட உள்நாட்டு பிரச்சினைகளை உரிய வழியில் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினது தலைமையிலான அரசுக்கு முழு தைரியமும் உண்டு என்பதையும் இந்தியா நன்கு புரிந்து கொண்டிருப்பதால் எவ்வித அழுத்தங்களுக்கும் இலங்கை உட்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்கரிய பீடாதிபதிகளை சந்தித்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றபின் செய்தியாளர்களிடம் உரையாற்றும்போதே அமைச்சர் போகொல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், வெளிநாட்டுத் தலைவர்கள் இந்த நாட்டுக்கு கடந்தவருடம் வருகை தந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர். என்று குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment