ஜோர்தானில் மரணமான பெரியசாமி சாவித்திரியின் மரணத்தில் மர்மம்!!
பதுளை மாவட்டம் ஹாலிஎலைப் பகுதி டிக்வெல்ல பெருந்தோட்டத்திலிருந்து ஜோர்தான் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற பெரியசாமி சாவித்திரி வயது 22 என்பவரின் மரணம் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. இது குறித்து உடன் விசாரணை நடத்துவதுடன் அவருக்கு நஸ்ட ஈட்டைப் பெற்றுக்கொடுக்க ஆவன செய்யுமாறு ஊவா மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஜோர்தானிலுள்ள இலங்கை து}துவராலய தலைமைச் செயலர் எஸ்.எம்.சுபசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்தவருடம் நவம்பர் 20ம் திழகி ஜோர்தான் நாட்டுக்கு சென்ற இவ் இளம்பெண் கடந்த 06ம் திகதி இறந்துவிட்டதாக அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மரணமானது மர்மனம் நிறைந்திருப்பதாக மரணமான இளம்பெண்ணின் குடும்பத்தார் உறுதியாக கூறுகின்றனர். ஆகையால் தாங்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி அவரின் குடும்பத்தாருக்கு நியாயம் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மரணமான பெண்ணின் சடலத்தை உடன் இலங்கைக்கு அனுப்புவதுடன் இதுபற்றி விசாரணையை மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள் அதனைத் தொடர்ந்து மரணமான பெண்ணின் நட்டஈட்டைப் பெற்றுக்கொடுங்கள் இதற்கு ஆவன செய்யுங்கள் என்றும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment