ஒசாமா பின்லேடன் விவகாரத்தை ஒபாமா எவ்வாறு கையாள்வார்
அமெரிக்கர்களின் அதிகார மட்டத்தில் இம்மாதம் ஏற்படும் மாற்றம், பயங்கரவாதத்துக்கு எதிரான அதன் யுத்த தந்திரோபாயங்களில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
சர்வதேச ரீதியாக எழுப்பப்படும் முக்கியமான ஒரு கேள்வியாக இது அமைந்துள்ள அதேவேளையில், ஈழத் தமிழர்களுடைய எதிர்பார்ப்பாகவும் இது உள்ளது.
இந்த நிலையில் புதிதாக ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கவுள்ள பராக் ஒபாமா அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் எதனையாவது ஏற்படுத்துவாரா என்ற கேள்விக்கான பதிலை ஆராயப் புகுவோம்.
அமெரிக்க ஜனாதிபதித் தேதர்தல் பிரசாரங்களின் போது இரண்டு பிரதான வேட்பாளர்களுமே அனைத்து விவகாரங்களிலுமே முரண்பட்டார்கள், மோதிக் கொண்டார்கள். ஒரு விடயத்தைத் தவிர, கருத்தொருமைப்பாடு காணப்பட்ட அந்த ஒரேயொரு விடயம் என்னவென்றால், பின்லேடனை எவ்வாறு கையாள்வது என்பதுதான். பொதுவிவாதம் ஒன்றில் கலந்துகொண்ட இருவருமே பின்லேடனை கொலைசெய்ய வேண்டும் என்பதே தமது விருப்பம் என்பதை வெளிப்படுத்திய அதேவேளையில், அல்கைதா அமைப்பை அழித்துவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை 2008 நவம்பர் 4ஆம் திகதிக்கு முன்னர் அல்கைதா அமைப்பை அழித்துவிட வேண்டும் என வலியுறுத்தி அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு ஆப்கானிஸ்தானுக்குள் அதிகளவு துருப்புகளை அனுப்பிய அதேவேளையில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியிலுள்ள முகாம்கள் மீது தாக்குதல்களை அதிகரிக்குமாறும் உத்தரவிட்டார்.
தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பராக் ஒபாமா வெளிப்படுத்தும் கருத்துகள் கூட அமெரிக்காவின் முன்னைய நிர்வாகம் கையாண்ட அணுகுமுறையைத் தான் அவரும் கையாளப் போகின்றார் என்பதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் துருப்புகளை அதிகரிப்பது, பாகிஸ்தானுடனான இராணுவ ரீதியான உறவுகளை வலுப்படுத்துவது போன்ற ஒபாமாவின் கருத்துகள் பின்லேடனைத்தான் அவர் தனக்கான பிரதான அச்சுறுத்தலாகக் கருதுகின்றார் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில் பார்க்கும்போது பின்லேடன் பிடிபடுவாராயின் அவர் கொல்லப்படுவார் என்பது தெரிகின்றது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளைப் பொறுத்தவரையில் பின்@லடன் கொல்லப்படுவது என்பது அவர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும் ஒன்றாகவே இருக்கும். அதனைவிட அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு இது பெருமளவு நம்பிக்கையைக் கொடுப்பதாகவே அமையும்!
பின்லேடனைக் கொல்லும் முயற்சியில் தோல்வியடைந்தால் ஒரு பலவீனமான நிலையில் இருப்பதாகவே அமெரிக்கா கருதப்படும் என ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது! இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள மற்றொரு ஆய்வாளர் அல்கைதா அமைப்பைத் தோல்வியடையச் செய்வதற்கான இரண்டு நிபந்தனைகளில் இதுவும் ஒன்று எனக் குறிப்பிடுகின்றார். பின்லேடனின் மரணமும் அல்கைதா அமைப்பு ஆட்சேர்ப்புக்காகப் பயன்படுத்தும் தொடர்பு வலையமைப்பை அழிப்பது@ம அவ்வமைப்பைத் தோல்வியடையச் செய்வதற்கான வழிகள் என்பது அவருடைய கருத்தாகும்.
இருந்த போதிலும் இதற்கு முரணான கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, பின்லேடனின் மரணம் அல்கைதா அமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகளில் எந்தவிதமான மாற்றங்களையும் ஏற்படுத்துவதாக அமையாது என்ற கருத்தை மற்றொரு ஆய்வாளர் முன்வைக்கின்றார். ஜிஹாத் தொடர்பான நூலொன்றையும் எழுதியுள்ள இவர், அல். கைதாவைப் பொறுத்தவரையில் அது நீண்டகாலத்துக்கு பலமான, மையப்படுத்தப்பட்ட ஒரு தலைமையைக் கொண்ட அமைப்பாக இயங்கப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றார். அதாவது, எதிர்காலத்தில் அல்கைதா அமைப்பானது சுதந்திரமானதும் தனித்தனியானதுமான முகாம்களாகச் செயற்படும் என்பதே அவருடைய கருத்தாகவுள்ளது.
அவருடைய கருத்து சரியனதாக இருக்குமாயின் பின்லேடன் இல்லாமலேயே அல்கைதா வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதேவேளை, அல்கைதாவின் ஸ்தாபகர்களில் ஒருவரான அல்ஸஜாரியின் கட்டளைக்கு அமைவாகவே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. குறிப்பாக, மட்றிட் ரயில் தாக்குதல் உட்பட பல தாக்குதல் சம்பவங்களில் பின்லேடன் சம்பந்தப்படவில்லை என்றே அமெரிக்க புலனாய்வு வட்டாரங்களுக்கு செய்தி கிடைத்திருந்தது. இந்தத் தாக்குதல்கள் அல்கைதாவின் தலைமைக் கட்டளை மையத்துக்கு உட்படாத வகையிலேயே திட்டமிடப்பட்டிருக்கின்றது. இது ஒரு வகையில் எதிர்காலத்தில் அல்கைதா அமைப்பில் பின்லேடனின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்ற போதிலும் பின்லேடனின் மரணம் மட்டுமே அமெரிக்கா முன்னெடுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை வெற்றிபெற்றதாகக் காட்டிக் கொள்வதற்கு உதவுவதாக அமையும்.
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹு ன் அமெரிக்கப்படைகளிடம் உயிருடன் பிடிபட்டதைப் போல பின்லேடன் பிடிபடுவதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இல்லை என அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் குறிப்பிடுகின்றார்கள். பின்லேடனின் மிகவும் நெருங்கிய நண்பராகவும் அவரது மெய்ப்பாதுகாவலராகவும் இருந்த அபு ஜன்டல் இது தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியமானவை. பின்லேடன் கைது செய்யப்படும் அச்சுறுத்தல் காணப்பட்டால் அவரை (பின்லேடனை) கொன்று விடும் பொறுப்பு அபு ஜன்டலிடமே வழங்கப்பட்டது. "கைது செய்யப்படுவதைவிட வீரமரணமடைவதே மேல்' என்ற கருத்தையே அவர் வெளியிடுகின்றார். கைது செய்யப்படுவதற்கான ஆபத்து இருந்தால் தமது தலைவரைக் கொன்றுவிடுவதுதான் சரியான செயல் என அல்கைதா போராளிகளுக்கும் போதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மரணமடைந்த பின்னர் கூட மேற்கு நாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் அல்கைதா அமைப்பைப் பொறுத்தவரையில் ஒரு சக்திவாய்ந்த சின்னமாக இருக்கும் எனக் கூறப்படுத்துவதில் உண்மையுள்ளது.
ஆனால், இதற்கு முற்றிலும் முரணான வகையில், பின்லேடன் உயிருடன் பிடிபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவாராயின் வீரமரணமடைவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமல் போய்விடும். அதேவேளையில், பின்லேடனின் செயற்பாடுகளை குற்றவியல் சம்பவங்களாகக் காட்டிக்கொள்வதன் மூலம் அவருக்குக் கிடைக்கக்கூடிய வீரத் தலைவன் என்ற அந்தஸ்தை மழுங்கடித்து அவர் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் போற்றத்தக்கவையல்ல என அவருடைய ஆதரவாளர்களுக்கு செய்தியொன்றைத் தெரிவிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பது எப்.பி.ஐ.யின் திட்டங்களில் ஒன்றாகவுள்ளது.
விசாரணைகளின் மூலம் பின்லேடனை ஒரு கிரிமினல் குற்றவாளியாகக் காட்டமுடியும் என அமெரிக்கா கருதினால், அவரை உயிருடன் கைது செய்வதற்கும் அவர் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் முற்படும் இவ்வாறான நிலையில் பின்லேடன் மீதான விசாரணைகள் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில்லாமல் சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் நடத்துவதற்@க அமெரிக்கா விரும்பும். ஏனெனில், இதன்மூலமாக மட்டும்தான் பின்லேடனின் குற்றங்கள் அமெரிக்கா வுக்கு மட்டும் எதிரான தல்ல,அது சர்வதேச?மூகத்துக்கும் எதிரானதெனக் காட்டிக் கொள்ள முடியும். றுவாண் டாவில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக ஐ.நா.வால் அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தைப் போன்றதாகவே இதற்கான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பின்லேடன் மீதான விசாரணைகளை அமெரிக்காவுடன் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமாக விசாரணை நடத்தக்கூடாது எனக் குறிப்பிடும் மற்றொரு ஆய்வாளர், அவ்வாறு நடத்துவது இந்த விசாரணைக்கு இருக்கக்கூடிய சர்வதேச முக்கியத்துவத்தைக் குறைத்துவிடுவதாகவும் அமைந்துவிடும் எனக்குறிப்பிடுகின்றார். அதேவேளையில், அது குறிப்பாக இஸ்லாமிய நாடுகளின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச மயப்படுத்தப்பட்ட விசாரணையே அவசியமானதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைவிட இந்த விசாரணைகள் ஒரு இராணுவ விசாரணையாக இல்லாமல் பகிரங்கமான விசாரணையாக நடத்தப்பட வேண்டும் என்பதையும் சட்டத்துறை சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
ஆனால், பின்லேடனைக் கைது செய்வதென்பது பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதொன்று என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். அவருடைய மரணத்தைப் போலவே அவர் கைது செய்யப்படுவது கூட, அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான்.
அதேவேளையில் பின்லேடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, அவர் வி??ரணைக்குட்படுத்தப்படுவது, தன்னுடைய கருத்துகளைப் பிரசாரப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக அமைந்துவிடும். புதிதாக ஆட்சேர்ப்பை மேமற்கொள்வதற்கும் இது வழிவகுக்கும். அதேவேளையில், பின்லேடன் விசாரணைக்கு உட்படுத்தப்படும் காலத்தில், அவரது ஆதரவாளர்கள் அவரது விடுதலைக்காக பணயக் கைதிகளைப் பிடித்துவைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்பதை மறுக்கமுடியாது.
அமெரிக்கப் படைகள் ஈராக்கிற்குள் பிரவேசித்து 10 மாத காலத்தின் பின்னரே சதாம் ஹுசெயின் அமெரிக்கப் படைகளால் 2003 டிசம்பர் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஆனால், பின்@லடனைப் பிடிப்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பித்து ஏழு வருட காலம் சென்றுவிட்ட போதிலும் பின்லேடனை அமெரிக்காவினால் நெருங்க முடியவில்லை. இந்த நிலையில்தான் பின்லேடனைக் கைது செய்து அழிப்பதற்காகவே அமைக்கப்பட்ட தனிப்படை 2005இல் கலைக்கப்பட்டது. பின்லேடனைக் கைது செய்வதற்கென்றே இத்தனை வளங்களைச் செலவிடுவது அநாவசியமானது என்பதையும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை பரந்தளவில் முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்பதையும் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனங்கள் உணர்ந்து கொண்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
செப்டெம்பர் 11 இற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் அல்கைதா அமைப்பு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தலைமையைக் கொண்ட அமைப்பாகவே கருதப்பட்டது. அத்துடன் வசீகரத்தன்மையைக் கொண்ட ஒரு அமைப்பாகவும் அது கருதப்பட்டது. இருந்த போதிலும் தற்போது அதன்தொடர்பு வலையமைப்பில் காணப்பட்ட இறுக்கம் குறைந்துள்ளது. அத்துடன் தனித்தனியானதாகவும் அதன் செயற்பாடுகள் அமைந்துள்ளன. பின்லேடனின் கருத்துகள் அவர்களை வழிநடத்துபவையாக இருக்கின்றபோதிலும் பின்லேடனுடன் இறுக்கமான உறவுகள் அவர்களுக்கு இல்லை. அல்கைதாவின் தலைவர்கள் பலர் கொல்லப்பட்ட போதிலும் அவ்வமைப்பு தொடர்ந்தும் வளர்ச்சியடையும் ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது. 2008ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையிலும் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பின்லேடனுக்கு இஸ்லாமிய நாடுகளில் பெருகக்கூடிய ஆபத்து தனக்கு அச்சுறுத்தலானதென்றே அமெரிக்கா கருதுகின்றது. இஸ்லாமிய நாடுகளில் பின்லேடனின் கருத்துகளுக்கு உருவாகக்கூடிய எதிர்ப்புகள் அல்கைதா அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் என அமெரிக்கா கருதுகின்றது.
இதனைக் குறிப்பிடும் அமெரிக்க ஆய்வாளர் ஒருவர், பின்லேடனைப் படுகொலை செய்வதோ அல்லது அவர் மீதான விசாரணையை முன்னெடுப்பதோ அமெரிக்காவுக்கு சாதகமாக அமையாது எனக் குறிப்பிடுகின்றார். பதிலாக அல்கைதாவுக்கு எதிரான வகையில் இஸ்லாமிய நாடுகளையும் இஸ்லாமிய மதத் தலைவர்களையும் தூண்டிவிடுவதன் மூலமாக அல்கைதாவை பலவீனப்படுத்துவதுதான் அமெரிக்கா கையாளக்கூடிய சிறந்த இராஜதந்திரமாக இருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார். புதிதாக பதவியேற்கவுள்ள ஒபாமா என்ன செய்வார்?
சபரி
0 விமர்சனங்கள்:
Post a Comment