யுத்தம் நடக்கும்போது தமிழர்கள் கொல்லப்படுவது இயல்பு. ஈழத்தமிழர் என்றுகூட அம்மக்களை அழைப்பது தவறு ஈழம் என்ற ஒரு நாடும் இல்லை - ஜெயலலிதா
இலங்கை தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் தான் என்பதை தாங்கள் நம்பவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார் .
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காலவரையற்ற உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பது, அவரும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அப்பாவி இலங்கைத்தமிழர்கள் கொல்லவேண்டும் என்று இலங்கை ராணுவம் கருதவில்லை, மாறாக யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உலகமெங்கும் நடப்பதுதான் என்றார்.
தவிரவும் யுத்தம் நடக்கும் இடங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயராமல் தடுப்பதே விடுதலைப்புலிகள்தான் என்றும் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.
வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் ஈழத்தமிழர் என்றுகூட அம்மக்களை அழைப்பது தவறு என்றும் ஏனெனில் ஈழம் என்ற ஒரு நாடும் இப்போது இல்லை எனவே அவர்களை இலங்கைத் தமிழர்கள் என்றுதான் அழைக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment