முல்லைத்தீவு மீதான தாக்குதலுக்கு தாயாராகும் 50,000 படையினர்: "லக்பிம"
முல்லைத்தீவு நோக்கிய தாக்குதலுக்கு சிறிலங்கா படையினர் 8 டிவிசன்கள் கொண்ட 50,000 பேருடன் தயாராகி வருகின்றனர். அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை 500 சதுர கி.மீ பரப்பளவில் ஒரு பெட்டி வடிவில் சுற்றிவளைத்துள்ளனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா படையினரின் 8 டிவிசன்கள் கொண்ட 50,000 பேருடன் முல்லைத்தீவு நோக்கிய தாக்குதலுக்கு தயாராகி வருகின்றன. அவர்கள் விடுதலைப் புலிகளை 500 சதுர கி.மீ பரப்பளவில் ஒரு பெட்டி வடிவில் சுற்றிவளைத்துள்ளனர்.
இறுதிக் கட்ட நடவடிக்கை ஏற்கனவே தொடங்கி விட்டது. படையினரின் முன்னணி நிலைகளை நகர்த்தி வருகின்றது. அதே சமயம் கடந்த வாரங்களில் படையினர் தமது ஆயுத வளங்களையும் அதிகப்படுத்தியுள்ளனர். சிறிலங்காவின் வரலாற்றில் இதுவே படையினர் குறுகிய பரப்பளவில் அதிகளிவில் செறிவாக்கப்படும் நடவடிக்கையாகும்.
படையினர் பெரும் படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே சமயம் சிறிய தாக்குதல்களையும் சிறப்பு படையணிகள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். நாள் ஒன்றிற்கு 10 தொடக்கம் 15 விடுதலைப் புலிகளையாவது கொல்வது என்பது தான் இந்தப் படையணிகள் ஒவ்வொன்றினதும் கட்டளை அதிகாரிகளின் திட்டம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 விமர்சனங்கள்:
Post a Comment