ஜேர்மனியில் குடியயுரிமை கோரும் இலங்கைக்கு புதிய சலுகை
ஜேர்மன் நாட்டில் 2007ஆம் ஆண்டு புதிதாக கொண்டுவரப்பட்ட குடிவரவாளர்களுக்கான சட்டத்தில் அந்த நாட்டின் நிரந்தர வசிப்புரிமை மற்றும் குடியுரிமை பெற்றவர்கள் எந்தவொரு வெளிநாட்டிலுள்ளவர்களையும் திருமணம் செய்து விசா அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பம் கோருவதெனில் அந்த நாட்டின் ஜேர்மனிய மொழியை கணிசமானளவு கொண்டிருத்தல் வேண்டுமென்று கட்டாயச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இலங்கை, ஈராக் போன்ற நாடுகளில் தற்போதைய நெருக்கடியான நிலைமையை கருத்தில் கொண்டு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்தநாட்டுக்கான சட்டஆலோசகர் எம்.ரி.எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் வூப்பெற்றஸ் முத்மன் அன்ட் கோறன்புளோ சட்ட நிறுவனத்தின் வெளிநாட்டுப் பிரிவுக்கான சட்ட ஆலோசகரும் அந்நாட்டின் இலங்கைக்கான விசேட அரசியல் திறனாய் வாளருமான எம்.ரி.எஸ். இராமச் சந்திரன் கடந்த 18 வருடகாலமாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஆலோசகராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
அத்துடன் தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான இலங்கை நிலைமைகள் தொடர்பிலான திறனாய்வாளராகவும் பணியாற்றி வரும் இவர் சகல தரப்பினரதும் நலன்களைப் பேணுவதில் நடுநிலையாளராக பணியாற்றுவதாகவே பாராட்டு பெற்றவராவார்.
1999ஆம் ஆண்டிலிருந்து புலம்பெயர் ஈழத் தமிழர்களின் நலன்களைப் பேணுவதற்கான சட்ட ஆலோசகராகவும் ஜேர்மனிய நாட்டுக்கான திறனாய்வாளராகவும் செயற்பட்டு வரும் இவர் செம்மணிப் படுகொலைகள் தொடர்பான தகவல்களை திரட்டி அறிக்கை சமர்ப்பித்ததன் ஊடாக ஜேர்மனிய வதிவிட விசா மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு விசா கிடைப்பதற்கு வழிவகுத்தவர்.
மூன்று மாதங்களிற்கு ஒருமுறை இலங்கைக்கு விஜயம் செய்து இங்குள்ள அரசியல் நிலைவரங்கள் மற்றும் சமகால நிகழ்வுகள் தொடர்பாக திற?ய்வு செய்து ஜேர்மனிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் எம்.ரி.எஸ். இராமச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்தபோது ஞாயிறு தினக்குரலுக்கு ஜேர்மனிய புதிய சட்ட நடைமுறைகள் தொடர்பாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
ஜேர்மனிய புலம்பெயர்ந்து அகதி அந்தஸ்து கோரியுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிப்பதற்கான போதிய அறிவின்றி உரிய ஆலோசனைகளைப் பெறமுடியாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன் பலர் நாடு கடத்தப்படும் துயரமான நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
இதனைவிட ஜேர்மனிய வதிவிட மற்றும் குடியுரிமை பெற்றவர்கள் கூட திருமணம் முடித்து பலவருடங்கள் கழிந்த நிலையிலும் தமது துணைவியாரை, குழந்தைகளை உரிய காலத்தில் தம்முடன் அழைத்துச் செல்ல முடியாது வருடக் கணக்கில் தனிமையில் வாழும் நிர்ப்பந்திய சூழ்நிலையும் காணப்படுகின்றது.
ஜேர்மனிய சட்டத்தின்படி திருமணம் முடிந்து ஆறு மாதகாலப் பகுதியில் தொடர்ச்சியாக பிரிந்திருந்தாலும் சட்ட ரீதியாக அந்த திருமணம் செல்லுபடியற்றதாகிவிடும்.
இந்த நிலையில் ஜேர்மனிய மொழியை கற்பிக்கும் கொழும்பிலுள்ள பல தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் முறைகேடாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளதாக அங்கு கல்வி கற்ற பலர் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடித்த ஒரு குடும்பப் பெண் ஒருவர் கூட கடந்த சில தினங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்து தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக முறையிட்டுள்ளார். எனவே, இவ்வாறான பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் எம்முடன் தொடர்புகொண்டால் உரிய ஆலோசனைகளையும் சட்ட ரீதியான உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம்.
ஜேர்மன் நாட்டின் குடிவரவாளர்களுக்கான 2007ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் ஜேர்மனியில் வசிப்பவர்கள் நிரந்தர வசிப்புரிமை மற்றும் குடியுரிமை உடையவர்கள் வெளிநாட்டில் உள்ளவர்களை திருமணம் செய்து உலகில் எந்தப் பாகத்தில் இருந்தாலும் ஜேர்மன் மொழியை கணிசமான அளவு கற்றபின்புதான் அவர்கள் அங்கு குடியேறுவதற்கான விசாவைப் பெறலாம் என்பது அந்த நாட்டு கட்டாய சட்டம்.
ஜேர்மனிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அரசியல் நீதிமன்றம் இப்போது சில நாடுகளில் உள்ளவர்களுக்கு சலுகை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதில் இலங்கையும் ஒன்றாகும். இந்த முயற்சியை லூப்பெற்றஸ் நகரில் உள்ள சட்ட நிறுவனமான முத்மன் அன்ட் கோறன்புளோ நிறுவனம் இலங்கையர்களுக்காக முயற்சி செய்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் கல்வியை கற்று நிறுவனத்தின் வெளிநாட்டுப் பிரிவின் சட்ட ஆலோசகராக கடமையாற்றும் என்னை நியமித்துள்ளது.
இந்த சட்ட நிறுவனம் கடந்த 18 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களுக்கும் விசா நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் அரசியல் தஞ்சம் மற்றும் குடும்பத்துடன் ஒன்றிணைபவர்களுக்கும் இன்னும் ஜேர்மனிய சட்ட சிக்கல்களுக்கும் ஆலோசனை வழங்குவதில் முன்னணி நிறுவனம்.
இந்தச் சட்ட நிறுவனம் குறிப்பாக 2000ஆம் ஆண்டு இலங்கை அரசியல் அகதிகள் விடயமாக ஜேர்மனிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுடன் அன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்த சங்கரி, மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் பொன்.செல்வராஜா, பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் யாழ்.மாநகர உள்ளூராட்சி மன்ற குழுவினரையும் நிறுவனத்தின் செலவிலே அழைத்து இலங்கை அகதிகளினுடைய நிலைப்பாட்டை ஜேர்மனிய அரசுக்கு ஆதாரபூர்வமாக புரிய வைத்தது.
2000 இலிருந்து 2002 இற்கு இடையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளுக்கு அரசியல் அந்தஸ்து பெற்றுக் கொடுத்தது மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான நாடுகடத்தப்படவிருந்தவர்களை இடைநிறுத்தி ஜேர்மனிய குடியகல்வு பொலிஸாரினால் சிறையில் பிடித்து வைக்கப்பட்ட அரசியல் அகதிகளுக்கு நிரந்தர விசாவை பெற்று மறுவாழ்வு வழங்கிய பிரபல்யமான நிறுவனம் இதுவாகும். இதனைவிட நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொழும்பு வந்து ஜேர்மனிய குடியுரிமை பெற்றவர்களை திருமணம் முடித்த பின்பு போதிய ஆங்கில அறிவு இல்லாது தமிழ் மொழியில் மட்டும் கல்விகற்ற யுவதிகள் இங்குள்ள ஜேர்மன் தனியார் நிறுவனங்களில் கல்வியை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறான நிலையில் தங்களுடைய மனக்குழப்பத்தால் ஜேர்மனிய தூதுவராலயம் எதிர்பார்க்கும் அளவு போதிய புள்ளியை பெற்றுக்கொடுக்க முடியாமையாலும் தொடர்ந்து கொழும்பிலே தாய், தந்தை, உறவினர் இல்லாது வாழ முடியாது என்பதாலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பெருமளவு பணத்தைச் செலவு செய்வதிலும் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதனால் அவர்களின் கணவன்மார் ஏற்கனவே மேற்படி சட்ட நிறுவனத்திற்கு சென்று முறையிட்டதன் காரணமாக இந்த நிறுவனம் ஜேர்மனிய உள்நாட்டு வெளிநாட்டு அமைச்சு, அரசியல் நீதிமன்றத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இவ்வாறானவர்களுக்கு குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார பிரச்சினை காரணமாக இலங்கையர்களுக்கு மட்டும் மொழிப் பிரச்சினையில் விதிவிலக்களிக்குமாறு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதன் விளைவாக இப்படியான காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு மனிதநேய அடிப்படையில் தவிர்த்துக்கொள்ள முடியும். அதற்கான வழிகாட்டலையும் நெறிப்படுத்தலையும் இந்நிறுவனம் இலங்கையில் இலவசமாக செய்வதற்கு தங்களுடைய நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் எம்.ரி.எஸ்.இராமச்சந்திரனை அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பான விடயங்களை கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
0771770162, 0714183132.
ஜேர்மனிய தொலைபேசி இலக்கம் 0202450415
பி.ரவிவர்மா
0 விமர்சனங்கள்:
Post a Comment