ஈழத் தமிழர்களின் பிரச்சினையை இந்தியாவின் பிரச்சினையாக்க வேண்டும்
""இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் எதிரொலியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்திருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்கும் வசதிகளை இந்திய அரசு கவனித்து வருகிறது. ஈழத் தமிழ் அகதிகளுக்கான பராமரிப்புப் பொறுப்பை அரசு எப்போது ஏற்றுக்கொண்டதோ அன்று முதல் இவ்விவகாரம் "உள்நாட்டுப் பிரச்சினை' என்ற வட்டத்தைக் கடந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிடும் உரிமை இந்தியாவுக்கு வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் தலையிட எல்லா உரிமையும் உண்டு மட்டுமல்ல; கணிசமான பொறுப்பையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். முக்கிய பங்காற்ற வேண்டும். சொல்லொtத் துன்பங்களுக்குள்ளாகி தினமும் உயிர் விட்டுக் கொண்டிருக்கும் அந்த ஈழத் தமிழ் மக்களுக்கு உடனடியாக பாதுகாப்புத் தரவேண்டிய கடமை, அவர்களது உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை, இந்தியாவின் பிரச்சினையாக ஆக்க வேண்டும்' என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் இல.கணேசன் "தினக்குரலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கருத்து வெளியிட்டார்.
இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக தமிழகத்திலும் டில்லியிலும் அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் பல அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ்ப் படைப்பாளிகளும் திரை உலகத்தினரும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள், உண்tவிரதப் போராட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் நடத்திவரும் சூழலில் எதிலுமே கலந்துகொள்ளாமல் தனியாகவும் போராட்டம் நடத்தாமலிருந்த பாரதிய ஜனதா கட்சி, தமிழகத் தலைவர் இல.கணேசன், திருநாவுக்கரசர் எம்.பி., தலைமையில் இம்மாதம் பன்னிரண்டாம் திகதி சென்னையில் உண்tவிரதப் போராட்டம் நடத்தி இன அழிவிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முதலில் போரை நிறுத்து என்று குரல் கொடுத்தனர். இப்போராட்டத்தில் பழ.நெடுமாறன் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். "தினக்குரலு'க்கு இல.கணேசன் நேற்று முன்தினம் அளித்த சிறப்புப் பேட்டியின் விபரம்.
தென்னாசியாவில் தொடர்ந்து வல்லரசாக நீடிக்க, இலங்கையை தனது கட்டுப் பாட்டுக்குள் இந்தியா வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதன் காரணமாக இலங்கை இரு அரசுகளாக பிரிவதை இந்தியா விரும்பாது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வந்தால் மட்டுமே, ஈழத் தமிழருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உரிமைகளை வழங்க முடியும். நான்கு மாதங்களில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவீர்களா?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் வாழவே விரும்பும். துண்டாடும்படியான கருத்தை இந்தியா சொல்ல முடியாது. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இங்கிருந்து கொண்டு தீர்மானம் எடுப்பது பொருத்தமற்றது என்பது எனது கருத்து. அந்த நாட்டு மக்களின் பிரச்சினை என்ன? அதன் பின்னணி, வரலாறு என்பன இந்திய அரசுக்கு முதலில் தெளிவாகத் தெரிய @வண்டும். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள், நிபுணர்கள் அமர்ந்து முடிவெடுக்க வேண்டும். இது நடந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இலங்கை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் கட்சி பாரதிய ஜனதா கட்சியாக@வ இருக்கும். அந்த நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து எல்.கே.அத்வானி தெளிவான கருத்தைக் கொண்டிருக்கிறார். உறுதியும் தந்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நிச்சயம் தீர்வு காணப்படும். இப்படியான ஒரு நம்பிக்கை எதிர்பார்ப்பில் வெளியுறவுக் கொள்கை மாற்றம் அவசியமாகத் தெரியவில்லை.
தமிழகம் மட்டுமல்ல, உலகத் தமிழரே ஒட்டு மொத்த குரலில் கோரிக்கை விடுத்தும் யுத்த நிறுத்தத்தை இந்தியப் பிரதமர் வலியுறுத்த வில்லையே?
ஈழத் தமிழர்களின் உண்மையான பிரச்சினை என்ன என்பது அரசுக்கு சரிவரப் புரியவில்லை என்பது எனது கருத்து. மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகள் சரி, தமிழக அரசியல் கட்சிகள் சரி, ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் தீவிர தன்மையை உணர்த்தவில்லை. இதன் காரணமாக தமிழருக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றியோ அவர்களது உரிமைகள் பற்றிக் கேட்கவோவா இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, நூற்று ஐம்பது கோகாடி பணமும் ஆயுதமும் ஆட்பலமும் தொழில் நுட்பமும் அளித்திருக்கிறது.
இலங்கைக்கு உடனடியாக பிரtப் முகர்ஜியை அனுப்பிவைப்பதாக தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்களிடமும் முதலமைச்சர் கரு்ணாநிதியிடமும் பிரதமர் மன்மோகன்சிங் வாக்குறுதி அளித்திருந்தார். பல வாரங்களின் பின்னர் இப்பொழுது இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனனை கொழும்புக்கு அனுப்பிவைத்திருக்கி?ர். மாற்றம் எதுவும் வருமா?
நம்பிக்கை இல்லை. மத்திய அரசுக்கு @காரிக்கை வைக்கும் கட்சிகளில் முக்கியமானவை அதன் கூட்டணியான தி.மு.க. மற்றும் பா.ம.க. இக்கட்சிகள் வெறும் @காரிக்கை மட்டுமே வைக்க முடியும். காங்கிர@ஸ அக்கறை எடுக்காத நிலையில் என்ன நடக்கப் போகிறது? பிரதமர் சொன்னார். அமைச்சர் பிரணாப் முகர்ஜி @பாகவில்லை. தமிழக முதல்வர் பேச்சுக்கும் மத்தியில் மதிப்பு இல்லை. காரணம், இவ்விடயத்தில் காங்கிரஸ் தலையிடாது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குரிய தீர்வை, அங்கு வாழுகின்ற மக்கள்தான் முவுவுசெய்ய வேண்டும் என்று ஒரு இணையத் தளத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கின்றீர்கள். இதன் விளக்கம் என்ன?
அவர்களின் தீர்மானம்; சுயாட்சியோ அல்லது தனி நாடோ சரி. நாங்கள் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. அவர்களேள முடிவு செய்யட்டும். அதேநேரத்தில், அங்கு பிரிவினை வேண்டும் என்று கோகாருவது பொருத்தமாக இல்லை என்றாலும் கைகட்டிக் கொண்டு நிற்பது தவறு. அந்த மக்களின் முடிவு, அவர்களின் சம உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு இந்தியா உதவலாம்.
கேள்வி : இலங்கைஇந்திய பிரதமர்களுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து?
பதில் : எந்த ஒப்பந்தத்தையுமே இலங்கை மதிக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. கடைப்பிடித்ததாக வரலாறு இல்லை. எல்லாமே மீறப்பட்டிருக்கின்றன. கிழித்தெறியப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், பரந்த அரசியல் எண்ணம் கொண்ட சிங்களத் தலைவர்கள் அங்கு இல்லை. இலங்கை அரசு மீது நம்பகத் தன்மையே கிடையாது.
கேள்வி : கச்சதீவு ஒப்பந்தம் பற்றி...?
பதில் : அந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கக்கூடாது என்பது பா.ஜ.க. கருத்து. நீண்ட நாட்களாக இதனை வெளிப்படுத்தி வருகின்றோம். நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. தவிர இலங்கை இந்திய தலைவர்களுக்கிடையே (ஜே.ஆர்ராஜீவ்) கையெழுத்தான ஒரு சர்வதேச ஒப்பந்தமே மீறப்பட்டிருக்கையில் மற்றுமொரு (கச்சதீவு) ஒப்பந்தத்தை இந்தியா மீறி?ல் அது அத்துமீறல் என்று அர்த்தம் இல்லை.
கேள்வி :இலங்கை எதிர்நோக்கியுள்ள இன்றைய போர் நடவடிக்கைக்கு யார் மூல காரணம் என்று எண்ணுகிறீர்கள்?
பதில் :முழுக்க முழுக்க இலங்கை அரசுதான். விடுதலைப் புலிகள் வளர்ந்ததற்கு இலங்கை அரசுதான் காரணம். ஈழத் தமிழருக்கு சம உரிமை கொடுக்க மறுக்கும் இவர்கள், சிறுபான்மை அந்தஸ்தை அளிக்கக்கூட விரும்பவில்லை. தமிழர்களும் இலங்கைப் பிரஜைகள்தான் என்பதை ஏற்கிறார்கள் இல்லை. தனது நாட்டுப் பிரஜைகளை சமமாகக் கருதும் எண்ணம் இலங்கையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இல்லை. நியாயம் கேட்கும் தமிழருக்கு, என்ன உரிமைகளை வழங்குவோம் என்று அறிவிக்காமலேயே ஒரு தலைப்பட்ச யுத்தத்தை தொடங்கி விட்டனர். முதலில் புலிகளை ஒழிப்பது. பின்னர் தமிழருக்கு அவர்களே விரும்பும் உரிமை கொடுப்பது. இது எந்த வகையில் நியாயமானது? தமிழருக்கு வழங்கும் உரிமைகளை முதலில் அறிவிக்க வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் புலிகளை ஒழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறும் இலங்கை அரசு தமிழினப் படுகொலையே செய்கிறது. தமிழரின் மண்ணும் பறிபோகிறது.
கேள்வி : இந்தியாவின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
பதில் : இலங்கையில் இன்று மனித உரிமைகள் பகிரங்கமாக மறுக்கப்படுகிறது. இனப்படுகொலை நடக்கிறது. லட்சக் கணக்கில் ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளனர். இந்த அகதிகள் வருகை தினம் தினம் அதிகரிக்கிறது. இந்நிலையில், தலையிட உரிமை இல்லை என்று இந்தியா ஒதுங்கியிருக்கக் கூடாது. கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமல்ல. தலையிட எல்லா உரிமையும் உண்டு. தலையீடு என்பது எமது கோரிக்கை. தமிழருக்கு என்ன உரிமைகள் கொடுக்கப் போகிறீர்கள் என்பதை இலங்கையை அறிவிக்கச் செய்ய வேண்டும். அதேநேரம் அந்த அறிவிப்பை மட்டும் ஏற்று ஏமாறிவிடக்கூடாது. நடுநிலை என்று கூறிக்கொண்டு இலங்கைக்கு பணம் மற்றும் இராணுவ உதவி செய்வது கொடுமையானது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, பாதுகாப்புக்கென அளிக்கும் ஆயுதங்கள் இந்தியா மீதே திருப்பப்படுகிறது. இலங்கைக்கு எதிரி நாடுகள் எதுவும் இல்லை. இலங்கைக்கு இந்தியா அளிக்கும் பணம் அடுத்த நிமிடமே ஆயுதங்களாக வாங்கப்பட்டு அங்குள்ள தமிழர்கள் மீதுதான் ஏவப்படுகிறது. இந்த அணுகுமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
கேள்வி : ஈழத் தமிழர்களை இலங்கையராக சிங்கள அரசு கருதவில்லை. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா கூட அன்று பல தடவைகள் "இங்குள்ள தமிழர்கள் எந்த நேரத்திலும் இந்தியாவோடு சேர்ந்து விடுவார்கள்' என்று அச்சம் தெரிவித்தது இன்றைய நாட்டு நிலைமைக்கு சரியான கருத்தாகத் தெரிகிறது. அதேநேரம், ஈழத் தமிழரை ஒரு அங்கமாக ஏற்க இந்தியா தயாரில்லையே?
பதில் : இலங்கை வாழ் தமிழர்களுக்கு உரிமைகள் வழங்க மனமில்லாதவர்கள் சொல்கின்ற வாதம் இது. இந்தியாவிலிருந்து பிரிந்த ஒரு பகுதிதான் இலங்கை. தமிழர் பூர்வீகக் குடிகள். இரு நாடுகளினது தமிழர்களின் பண்பாடு ஒத்துப்போகிறது. அரசியல், நிர்வாக உறவுகள் வேறு. பண்பாட்டு, தொப்புள் உறவு வேறு. இந்த உறவுதான் நீடிக்கும். இலங்கையில் இந்து ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டு பௌத்த விகாரைகள் எழும்புகின்றன. சிங்கள அரசு பூச்சாண்டி காட்டுகிறது. ஈழத் தமிழரின் அச்சம் தேவையற்றது.
கேள்வி : நான்கு மாதத்தில் நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால்,இலங்கை தமிழர் பிரச்சினையை எவ்விதம் அணுகுவீர்கள்?
பதில் : பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இலங்கை தமிழர் பிரச்சினை தீர்த்துவைக்கப்படும் என்பதை நிச்சயமாக சொல்கின்றேன். ஆனால், எப்படி என்று இப்போது கூறமுடியாது. ஈழத் தமிழருக்கு சம உரிமை என்பது அவர்களது பிறப்புரிமை. ஆகக் கூடியது ஆறுமாத காலத்துக்குள் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டு இங்கு வந்த அகதிகள் தந்திரமாக, கௌரவமாக தாயகம் திரும்பி முகமாக வாழச்செய்வோம். நாங்கள் உங்களுடன் இருக்கின்??ம். பண்பாட்டு ரீதியில் ஒன்று பட்டுள்ளோம். தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடுங்கள். ஆண்டவனும் உதவுவார். தேசிய சிந்தனையில் ஒன்றுபட்டவர்கள், உணர்வுள்ளவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். ஈழத் தமிழருக்கு நல்ல முடிவு, விடிவு நிச்சயம் ஏற்படும்.
தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா
0 விமர்சனங்கள்:
Post a Comment