வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுவர்கள் மீட்பு
கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைகளில் இடம்பெற்ற தேடுதலின் போது வலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஒன்பது சிறுவர்களை பொலீசார் மீட்டுள்ளனர். பொலீசாரும் தொழில் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நேற்று முன்தினம் பகல் 12மணிமுதல் பிற்பகல் 2மணிவரை இத்தேடுதல்களை மேற்கொண்டனர். மீட்கப்பட்ட சிறுவர்களை மாளிகாவத்தை நீதிமன்றில் ஆஜர்செய்ததுடன் அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment