விடுதலைப்புலிகள் கல்மடுக்குள அணைக்கட்டை உடைத்து பொதுமக்களுக்கு கடும் ஆபத்தை விளைவித்துள்ளனர் (படங்கள்)
பல முனைகளில் தாக்குதல் நடத்தி விஸ்வமடு பகுதியை நோக்கி நகரும் படையினரைத் தடுக்க விடுதலைப்புலிகள் நேற்று காலை கல்மடுக்குள அணைக்கட்டை உடைத்துள்ளதாக முல்லைத்தீவு களத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மனிதாபிமான மற்ற பயங்கரவாதச் செயலாகும். முல்லைத்தீவில் குறுகிய நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகளின் பிடியில் எதுவித உதவிகளுமின்றித் தவிக்கும் பொதுமக்களுக்கு இது மேலும் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளதாக பாதுகாப்பு அவதானிகள் தெரிவித்தனர். அப்பகுதி மக்கள் தற்போது உடையார்குளத்திலுள்ள யுத்தசூன்ய பகுதிக்கு வந்து கொண்டிருப்பதாகவும், இப்படி வருவோரை நோக்கி விடுதலைப்புலிகள் எறிகணை தாக்குதல்களை தொடுத்ததாகவும், எறிகணைத் தாக்குதல்களால் காயமடைந்த 200 பேர் தற்போது புதுக்குடியிருப்பு மற்றும் உடையார்கட்டுக் குளம் ஆகியவற்றில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பகுதி யில் சிக்கித் தவிக்கும் அப்பாவிப் பொதுமக்களை வெளியேறுவதைத் தடுப்பதற்காகவே இப்பயங்கரவாதச் செயலைச் செய்துள்ளனர். இதை முழு உலகமும் கன்டிக்க வேன்டும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போன்று படையினர் கிளிநொச்சியை நோக்கி பலமுனைகளில் தாக்குதல் நடத்திய போது இரணமடுக் குளத்தை உடைக்க முற்பட்டார்கள் எனவும் பாதுகாப்பு அவதானிகள் மேலும் தெரிவித்தனர்.
கல்மடுக்குளம் 4.5 கி.மீ. சதுரப்பரப்பளவு உடையது.நீர்பாசனத்தினைக்களத்தின் தகவல்களின் படி 500 எக்கர் நிலப்பரப்பையுடையது.
0 விமர்சனங்கள்:
Post a Comment