கொழும்பு நகர் மத்தியில் அமைந்திருந்த ஆடம்பர விபச்சார விடுதி முற்றுகை
குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு கொள்ளுப்பிட்டி, லிபட்டி பிளாசா சொகுசு மாடியில் உள்ள ஆடம்பர வீடொன்றில் நடாத்தப்பட்டுவந்த விபச்சார விடுதியை இன்று முற்றுகையிட்டுள்ளனர். கொழும்பு நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட இத்தேடுதலின் போது அங்கிருந்த 19 உள்ளுர், வெளிநாடுகளைச் சேர்ந்த இளம் யுவதிகளைக் கைது செய்துள்ளனர்.
அங்கு சீனா மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களும் இலங்கையின் அக்குரஸ்ச, கோமாகம, நீர்கொழும்பு, வலபொன, நுகேகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாக தெரியவருகின்றது. பல ஆண்டு காலமாக இடம்பெற்று வரும் இச் சட்டவிரோத செயலின் பின்னணியில் மிகவும் அரசியல் செல்வாக்கு மிக்க கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment