கருணாநிதி கேள்வி
ஏன் முஹர்ஜி கொழும்பு செல்லவில்லை? : புதுடில்லியிடம் கருணாநிதி கேள்வி
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி ஏன் இன்னமும் இலங்கைக்குச் சென்று, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராயவில்லையென்பதை மத்திய அரசாங்கம் விளக்கிக் கூறவேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்குச் செல்வதற்கான சரியான நேரத்தையாவது மத்திய அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்திருக்க வேண்டும் என கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்குச் சென்று வந்துள்ளபோதும், அமைச்சரின் விஜயம் குறித்து ஒரு வார்த்தை கலந்துரையாடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மு.கருணாநிதி, “இந்த விடயம் தொடர்பாக சிறிது காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன” என்றார்.
“ஜெயவர்த்தன-ராஜீவ் காந்தி உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன. எனினும், பேச்சுவார்த்தைக்கான அறிவிப்புக்கள் எதுவும் இதுவரை இல்லை. தீர்வு முன்வைக்கப்படும் வரையாவது மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்” என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் உணர்வலைகளால் தி.மு.க. மூன்றாவது தடவையாகவும் மாநிலத்தில் ஆட்சியை இழக்கக் கூடும் எனவும் தமிழக முதல்வர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment