பிரபாகரனை இந்தியாவிடம் கையளிக்க வேண்டாம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கைதுசெய்யப்பட்டால் அவருக்கு இலங்கையிலேயே தண்டனை வழங்க வேண்டுமென அரசியல் கட்சிகள் சில கருத்து வெளியிட்டுள்ளன.
பல்வேறு அரசியல் தலைவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாகவிருந்த பிரபாகரன் இலங்கையிலேயே தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
வடக்கில் நடைபெறும் மோதல்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் கைதுசெய்யப்பட்டால் அவருக்கு இலங்கை அரசாங்கம் தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.
“பிரபாகரனுக்கு தூக்குத் தண்டனையைத் தவிர வேறு எதுவும் வழங்க முடியாது. ஜனாதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகளை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அவர் படுகொலை செய்துவருகிறார்” என அவர் அந்த ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் தேடப்பட்டு வருவதால், இந்திய சட்ட அதிகாரிகளை இலங்கைக்கு வருமாறு அழைத்து, அவருக்கு இலங்கையிலேயே தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கம்மன்பில மேலும் கூறினார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு இலங்கையிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., தேவையெனின் பாதுகாப்புக்கு மாத்திரம் இந்தியாவை அழைக்கலாம் எனக் கூறியுள்ளது.
“அவரை நாம் இந்தியாவிடமோ அல்லது வேறு நாட்டிடமோ கையளித்தால் அவருடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கும். மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பாக அவருக்கு ஏற்கனவே 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என ஜே.வி.பி.யின் முன்னணி செயற்பாட்டாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.
சர்வதேச சட்டத்துக்கு அமைய பிரபாகரன் இலங்கையிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதுஇவ்விதமிருக்க, ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் தெரிவித்திருக்கும் கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக பிரபாகரனை இந்தியாவிடம் கையளிக்காமல் இலங்கையிலேயே தண்டனை வழங்குவது சிறந்தது எனக் கூறியுள்ளது.
படுகொலைகள், குண்டுத் தாக்குதல்கள் போன்றவற்றிற்காக பிரபாகரனுக்கு இலங்கை சட்டத்துக்கமைய தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மேலும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment