முல்லைத்தீவில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை: இராணுவம்
முல்லைத்தீவில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் மோதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக வெளியான தகவல்களை இராணுவம் மறுத்துள்ளது.
அண்மைய மோதல்களில் முல்லைத்தீவில் குறைந்தது 18 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக வைத்திய அதிகாரிகள் பி.பி.சி.யின் சிங்களச் சேவையான சந்தேசியாவுக்குக் கூறியிருந்தனர்.
எனினும், இதனை மறுத்திருக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார, பொதுமக்கள் மீது எந்தவிதமான தாக்குதல்களும் நடத்தப்படுவதில்லையெனத் தெரிவித்தார்.
பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லையெனக் கூறியிருக்கும் இராணுவப் பேச்சாளர், இவ்வாறான தகவல்கள் விடுதலைப் புலிகளின் பிரசார நடவடிக்கை எனக் கூறினார்.
சர்வதேசத்தின் கவனத்தைப் பெறுவதற்காக இவ்வாறான பிரசாரங்களில் விடுதலைப் புலிகள் ஈடுபடுவதாக இராணுவப் பேச்சாளர் பி.பி.சி. செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment