உடையார்கட்டுக் குளத்தில் புலிகளின் பாரிய தொழிற்சாலை கண்டுபிடிப்பு (படங்கள்)
புதுக்குடியிருப்பு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள உடையார் கட்டுக்குளம் காட்டுப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய தொழிற்சாலையொன்றினை நேற்றுமுந்தினம் (22) காலையில் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
பாரிய தொழிற்சாலையை அண்டியதாக வழிநடத்தல், கட்டளையிடல் போன்ற பணிகளை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் இடமொன்றினையும் படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
ரி-55 யுத்த டாங்கிகள், வெடிக்க வைக்கும் கருவிகள்-200, தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 81 மி.மீட்டர் மோட்டார்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள், டீசல், மண்ணெண்ணெய், கண்ணிவெடிகள்-20, இரும்புச் சட்டங்கள், லொறி, சக்திமிக்க மின் பிறப்பாக்கி உட்பட பெருந்தொகை ஆயுதங்களும் இங்கு காணப்பட்டதாக இராணுவத் தரப்பு தெரிவித்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment